இன்று ஏப்.20-ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 19, 2024

இன்று ஏப்.20-ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு!

April 20th is a local holiday ஏப். 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சித்திரைத் திருவிழா: தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை! உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் கட்டிடக்கலைக்கும் - சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் 18 நாள்கள் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்தவகையில், கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற ஏப். 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும் ஏப். 20 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.