NEET போட்டித் தேர்விற்கு மாணாக்கர்களை ஆயத்தப்படுத்துதல் (மார்ச்-ஏப்ரல் 2024) - Director Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 5, 2024

NEET போட்டித் தேர்விற்கு மாணாக்கர்களை ஆயத்தப்படுத்துதல் (மார்ச்-ஏப்ரல் 2024) - Director Proceedings



கல்வி மாவட்ட அளவில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் - 25.03.2024 முதல் 02.05.2024 வரை நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! Education District Level NEET Coaching Classes - Conducting from 25.03.2024 to 02.05.2024 Processes of the Director of School Education!

2023-2024ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவிகளில் NEET போட்டித் தேர்விற்கு நுழைவு தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவ/மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு முதன்மைக்கல்வி அலுவலர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் முடிந்த பின்னர் 25.03.2024 முதல் 02.05.2024 வரை NEET தேர்வு சார்ந்த பயிற்சிகள் / தேர்வுகள் 12-ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதால், NEET தேர்விற்கான பயிற்சிகள் (மார்ச்-ஏப்ரல் 2024) தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

எனவே, மார்ச் மற்றும் ஏப்ரல் 2024 மாதத்தில் நடத்தப்படவுள்ள NEET தேர்விற்கான பயிற்சிகளை இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அட்டவணைப் படி சிறப்புடன் செயல்படுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான NEET தேர்விற்கான பயிற்சிகள் (மார்ச் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள். -

ஏப்ரல் 2024) 1. நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை பள்ளி அளவில் JEE மற்றும் NEET தேர்வுகள் சார்ந்த பயிற்சிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக 12 ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வுகள் முடிந்த பின்னர் 25.03.2024 முதல் 02.05.2024 வரை NEET தேர்வு சார்ந்த பயிற்சிகள்/ தேர்வுகள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு கல்வி மாவட்டத்திற்கு அதிகபட்சம் இரண்டு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்திற்கு 40 மாணவர்கள் என மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.

இணையதள வசதி மற்றும் Smart Class Room வசதி உடைய பள்ளிகளை பயிற்சி மையங்களாக தேர்வு செய்ய வேண்டும்.

பயிற்சி மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில (Bilingual) வழியில் பயிற்சிகள்/ தேர்வுகள் நடைபெறும்.

ஒரு மையத்திற்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் என ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே திறமையும், ஆர்வமும், விருப்பமும் உடைய ஆசிரியர் குழுவினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே NEET தேர்வு சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு மையத்திற்கும் நாள் ஒன்றுக்கு நான்கு ஆசிரியர்கள் விலங்கியல், வேதியியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் என்ற வரிசையில் ஆசிரியர்கள் விருப்ப பாடம் அடிப்படையில் சுழற்சி முறையில் ஆசிரியர்களை பயன்படுத்தலாம். அனைத்து பாடங்களிலும் அனைத்து பாடப்பகுதிகளிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பாடப்பகுதி ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

நவம்பர் மாதம் முதல் வழங்கிய பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் NEET தேர்விற்கு விண்ணப்பிப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

நவம்பர் 2023 முதல் இப்பயிற்சியில் பங்கு பெறும் அனைத்து மாணவர்களும் NEET தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளான 09.03.2024 க்குள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

NEET தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டட பயிற்சி மையங்களுக்கு பாதுகாப்பாக சென்று வருவதை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருவதற்கான பேருந்து கட்டணத் தொகை மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனி வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும். காலை சிற்றுண்டி 8.30 மணி முதல் 9.00 மணி வரை வழங்கப்படும்.

ஒவ்வெரு சனிக்கிழமை அன்றும் காலை 9.15 மணி முதல் 10.45 மணி வரை திருப்புதலும் அதைத் தொடர்ந்து 11.00 மணி முதல் 12.40 மணி வரை வாராந்திர தேர்வுகளும் நடைபெறும். மதிய உணவு இடைவெளிக்குப்பின் பிற்பகலில் கலந்துரையாடல் மற்றும் Motivation அமர்வுகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

14. பயிற்சியின் இறுதியில் மொத்தம் 3 திருப்புதல் தேர்வுகள் நடைபெறும்.

பயிற்சி வகுப்புகள் வாராந்திர தேர்வுகள் மற்றும் மற்றும் திருப்புதல் தேர்வுகளுக்கான கால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு : கால அட்டவணை CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.