ஏப்.22க்கு பிறகு 1-9ம் வகுப்பு தேர்வுகள் - கல்வித்துறை ஆலோசனை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 17, 2024

ஏப்.22க்கு பிறகு 1-9ம் வகுப்பு தேர்வுகள் - கல்வித்துறை ஆலோசனை



பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் ஏப்.22க்கு பிறகு 1-9ம் வகுப்பு தேர்வுகள் கல்வித்துறை ஆலோசனை Class 1-9 Exams after Apr 22 – Education Department Counselling

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத் தேர்வு கள் நடந்து வருகின்றன. பிளஸ் 2 தேர்வு வரும் 22ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு வரும் 25ம் தேதியும் நிறைவு பெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிகிறது.

இது தவிர ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழக்கமாக ஏப்ரல் 20க்கு பிறகு தொடங்கி நடைபெறும். ஏப்ரல் 30ம் தேதி கல்வியாண்டுக்கான கடைசி வேலை நாளாக இருக்கும் வகையில் தேர்வு அட்டவணை தயாரிக்கப்படுவது வழக்கம்.


இந்த ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. பள்ளிகளில் தான் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். இதனால் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு பள்ளிகளில் தேர்தல் வாக்குசாவடி ஆயத்தப்பணிகள் தொடங்கிவிடும். ஆகவே தேர்தலுக்கு பிறகு ஏப்ரல் 22ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு வழக்கமாக ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஒவ்வொரு ஆண் டுகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பின் ஜூன் 2வது வாரத்துக்கு பள்ளிகள் திறப்பு தள்ளி போகும். இந்த ஆண்டு லோக்சபா பொதுத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகி றது. ஒவ்வொரு ஓட்டுச் சாவடிகளில் விடிய விடிய ஓட்டுகள் எண்ணும் நிலை ஏற்படும். எனவே 2024-25ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஜூன் 2வது வாரத்துக்கு அதாவது ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிப் போகும் என்று பள்ளிக்கல்வித்துறை வட் டாரத்தில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.