IFHRMSல் Income Tax கணக்கீட்டிற்கு OLD REGIME கொடுக்கலாமா? NEW REGIME கொடுக்கலாமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 3, 2024

IFHRMSல் Income Tax கணக்கீட்டிற்கு OLD REGIME கொடுக்கலாமா? NEW REGIME கொடுக்கலாமா?



IFHRMSல் Income Tax கணக்கீட்டிற்கு OLD REGIME கொடுக்கலாமா? NEW REGIME கொடுக்கலாமா?

செல்வ.ரஞ்சித் குமார்

தமிழ்நாடு அரசின்கீழ் மாத ஊதியம் பெறும் அனைவரும் மார்ச் 10ஆம் தேதிக்குள் IFHRMSல் தங்களுக்கான வருமானவரி கணக்கீட்டு முறையை உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒரு நிதியாண்டில் ஒருமுறை ஒரு வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்துவிட்டால் மாற்று முறைக்கு மாறிக்கொள்ள இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால், தங்களுக்கு எந்த வரிவிதிப்பு முறை (OLD REGIME / NEW REGIME) பயனுள்ளதாக இருக்கும் என்பதை முன்கூட்டியே உறுதி செய்தாக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

அதன்படி, 2024-25ஆம்  நிதியாண்டிற்கான தங்களது வருமான வரியைத் தோராயமாகக் கணக்கிட்டு தங்களுக்கான சரியான வரிவிதிப்பு முறையை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள இணைப்பிலுள்ள *அறிவுச்சாளரம் Income Tax Calculator 2025 (Proposal Version)* பதிப்பைத் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளவும். இப்பதிப்பு அறிவுச்சாளரத்தின் கடந்த வெளியீடுகளைப் போன்றதே. இதில் மார்ச் 2024 மாதத்திற்கான ஊதிய விபரம் உள்ளிட்ட வழக்கமான விபரங்களை உள்ளீடு செய்தால், ஒரே நேரத்தில் OLD REGIME & NEW REGIME என்ற இரு கணக்கீட்டு முறைகளிலுமான வருமானவரியை அறிந்து கொள்ளலாம். அதிலிருந்து தங்களுக்குப் பயனுள்ள வருமானவரிக் கணக்கீட்டு முறை எது என்பதைத் தற்போதே உறுதி செய்து கொள்ளலாம்.

கூடுதலாக, இப்பதிப்பில் DA 46% என்று வெளிப்படையாகத் தரப்பட்டுள்ளது. தோராயமாக ஏப்ரலில் 50%மும் ஜுலையில் 53%ஆகவும் அகவிலைப் படி மாற்றமடைய வாய்ப்புள்ளது. தேவைப்படின் அதைத் தாங்களே மாற்றிக் கொள்ளலாம்.

மாதாந்திர வருமானவரித் தவணையை இப்பதிப்பில் உள்ளிடத் தேவையில்லை Old Back / New Back Sheetகளில் உள்ள Pay Drawn Detailsல் 12 மாதங்களுக்கான வருமான வரித் தவணை தானாகவே கணக்கிடப்பட்டு காட்டும்.

நினைவில் கொள்க. இது 100% மாற்றங்களுக்குரிய தோராயக் கணக்கீடு மட்டுமே. IFHRMSன் முழுமையான வருமான வரிக்கணக்கீடு பயன்பாட்டிற்கு வந்த பின்னர், தேவைப்படின் அதனடிப்படையில் புதிய பதிப்பு வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.