Vocational Teacher Pay Order GO Published - 49 தொழிற்கல்வி ஆசிரியர் ( கணினி அறிவியல்) பணியிடங்களுக்கு 31.12.2025 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 2, 2024

Vocational Teacher Pay Order GO Published - 49 தொழிற்கல்வி ஆசிரியர் ( கணினி அறிவியல்) பணியிடங்களுக்கு 31.12.2025 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை



vocational Teacher Pay Order GO Published.

49 தொழிற்கல்வி ஆசிரியர் ( கணினி அறிவியல்) பணியிடங்களுக்கு 31.12.2025 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு! (கணினி அறிவியல்) தற்காலிக பணியிடங்களில் தற்போது அரசு பள்ளிகளில் பணியில் இருக்கும் 49 தொழிற்கல்வி ஆசிரியர்கள் (கணினி அறிவியல்) தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2023 முதல் 31.12.2025 வரை 03 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை - வெளியிடப்படுகிறது

மேலே ஒன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் 117 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் (கணினி அறிவியல்) பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டன. இப்பணியிடங்களுக்கு 01.01.2016 முதல் நிலை-1 தளம்-16ன்படி ரூ.36400 -115700 என்ற ஊதியக்கட்டு அனுமதிக்கப்பட்டது. மேற்காணும் பணியிடங்களுக்கு மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டு தொடர்நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் 117 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர் (கணினி அறிவியல்) பணியிடங்களுக்கு 01.01.2023 முதல் 31.12.2025 வரை மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குமாறு மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் அரசைக் கேட்டுக் கொண்டார்.

2. மேற்காணும் பள்ளிக்கல்வி ஆணையரின் கருத்துருவானது அரசாணை (D) எண்.271, நிதி (சி.எம்.பி.சி) துறை நாள்.18.08.2022-இல் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதற்கான தேவையை பரிசீலனைசெய்ய அமைக்கப்பட்ட குழுவின் கூட்டத்தில் வைக்கப்பட்டு அக்கூட்டத்தில் 117 தொழிற்கல்வி ஆசிரியர்கள் (கணினி அறிவியல்) தற்காலிக பணியிடங்கள் குறித்து பின்வருமாறு முடிவெடுக்கப்பட்டது.

In respect of the posts mentioned in Sl.No.7 to 11. viz. Vocational Teacher Grade I & II, vocational Teacher (Computer Science), Agricultural Vocational Education Teacher and Computer Instructors Grade II, it was decided that the posts declared as vanishing posts and as and when incumbents retire the posts shall be surrendered.

மேற்கண்ட குழுவின் கருத்தினடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்குநரிடமிருந்து பெறப்பட்ட 31.10.2023-ம் நாளிட்ட கருத்துருவில், அரசாணை (1டி) எண்.271, நிதி (CMPC) துறை, நாள்.18.08.2022-ன்படி அமைக்கப்பட்ட குழுவால் வழங்கப்பட்டுள்ள கூட்ட குறிப்பின்படி 117 தொழிற்கல்வி ஆசிரியர்கள் (கணினி அறிவியல்) தற்காலிக பணியிடங்கள் மறைந்து போகும் பணியிடங்களாக (Vanishing Posts) அறிவிக்கப்பட்டுள்ளதால். இத்தற்காலிகப் பணியிடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அவ்வப்போது ஓய்வு பெறும் போது, தற்காலிகமாக பணியிடங்கள் சரண் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், இத்தற்காலிக பணியிடங்கள் அரசுக்கு சரண் செய்தது போக. மீதமுள்ள பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொடர் நீட்டிப்பு கோரி கோரி அரசுக்கு கருத்துருக்கள் பரிந்துரைக்கப்படும் என தெரிவித்து, அரசாணை (1டி) எண்.46, பள்ளிக்கல்வித் (ப.க.7(1))த் துறை, நாள்.17.02.2020-இன்படி, 117 தொழிற்கல்வி ஆசிரியர்கள் (கணினி அறிவியல்) தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2020 முதல் 31.12.2022 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில், மேற்காணும் 117 தொழிற்கல்வி ஆசிரியர் (கணினி அறிவியல்) தற்காலிக பணியிடங்களில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் உள்ள உள்ள 68 68 தொழிற்கல்வி ஆசிரியர்கள் நீங்கலாக, தற்போது அரசு பள்ளிகளில் பணியில் இருக்கும் 49 தொழிற்கல்வி ஆசிரியர்கள் (கணினி அறிவியல்) தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2023 முதல் 31.12.2027 வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தற்காலிக தொடர்நீட்டிப்பு ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்.

4. மேற்கண்ட நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, அரசாணை (நிலை) எண்.790, கல்வி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் துறை நாள் 06.11.1996-ன்படி தோற்றுவிக்கப்பட்ட 117 தொழிற்கல்வி ஆசிரியர்கள் (கணினி அறிவியல்) தற்காலிக பணியிடங்களில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் உள்ள 68 தொழிற்கல்வி ஆசிரியகள் நீங்கலாக, தற்போது அரசு பள்ளிகளில் பணியில் இருக்கும் இவ்வாணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 49 தொழிற்கல்வி ஆசிரியர் (கணினி அறிவியல்) தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2023 முதல் 31.12.2027 வரை ஐந்தாண்டுகளுக்கு மட்டும் தொடர் நீட்டிப்பு வழங்க முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.

5. இப்பணியிடங்களில் பணிபுரிபவர்கள் அடிப்படை ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை நடைமுறையில் உள்ள விதிகளின்படி பெறத் தகுதியானவர்களாவர். இப்பணியிடங்களுக்கான ஊதியம் மற்றும் படிகளுக்கான செலவினம் கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் பற்று வைக்கப்படவேண்டும்:- Vocational Teacher Pay Order GO

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.