விலையில்லா காலணிகள் மாணவர்களின் கால்களுக்கு மிக கச்சிதமாக பொருந்த பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டம்.Cost free footwear & shoes distribution - DSE & DEE Co-Proceeding - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 2, 2024

விலையில்லா காலணிகள் மாணவர்களின் கால்களுக்கு மிக கச்சிதமாக பொருந்த பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டம்.Cost free footwear & shoes distribution - DSE & DEE Co-Proceeding



பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண்: 17530/கே3/2023,

பொருள்:

பள்ளிக் கல்வித் துறை

நாள்: 01.012024.

பார்வை:

விலையில்லா நலத்திட்டங்கள்

காலணிகள் (Footwear) மற்றும் காலேந்திகள் (Shoes) மாணவ/மாணவியருக்கு பொருத்தமாக துல்லியமான அளவில் தயார் செய்து வழங்குதல் - பள்ளிதோறும் மாணவ/ மாணவியர் வாரியாக துல்லிய அளவு எடுத்து நலத்திட்டப் பொருட்களை வழங்குதல் - இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை அளவு எடுக்கும் பணிக்கு உட்படுத்துதல் - கண்காணிக்கும் பொறுப்பு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - ITK Appன் வழியாக EMIS இணையதளத்தில் உள்ளீடு உள்ளீடு செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.

விலையில்லா காலணிகள் மாணவர்களின் கால்களுக்கு மிக கச்சிதமாக பொருந்த பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டம்.

தமிழ்நாடு அரசால் விலையில்லா நலத்திட்டங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலணிகளாகவும் Footwear ) 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலேந்திகளாகவும் Shoes ) வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் காலணிகள் ( Footwear ) மற்றும் காலேந்திகள் ( Shoes ) மாணவர்களின் கால்களுக்கு மிக கச்சிதமாக பொருந்தும் வகையில் அளவெடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்த பார்வையில் காணும் அரசுச் செயலாளர் அவர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது . பள்ளி மாணவர்களின் கால் அளவுகளை எடுப்பதற்காக ITK தன்னார்வலர்களை உட்படுத்தி அளவுகளை துல்லியமாக எடுத்து அதன் விவரங்களின்படி விலையில்லா நலத்திட்டப் பொருள்களான காலணிகள் ( Footwear ) மற்றும் காலேந்திகள் ( Shoes ) உருவாக்குவதற்கு தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி ) , வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். Footwear& Shoes Entry DSE & DEE Proceedings CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.