ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு தளர்வு.. தமிழக அரசு அறிவிப்பு.!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 25, 2024

ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு தளர்வு.. தமிழக அரசு அறிவிப்பு.!!ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு தளர்வு.. தமிழக அரசு அறிவிப்பு.!!!

அரசுப் பள்ளிகளில் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உயர்த்தப்பட்ட வயது உச்சவரம்பை, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு!

ஆசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனங்களுக்கான வயது வரம்பை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பு பொது பிரிவினருக்கு 53 எனவும் இதர பிரிவினருக்கு 58 எனவும் மாற்றப்பட்டுள்ளது. வயது உச்சவரம்பு தளர்த்தப்படும் என கடந்த மாதம் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக அதிகபட்ச வயது பொது பிரிவினருக்கு 40 மற்றும் விவர பிரிவினருக்கு 45 என இருந்தது குறிப்பிடத்தக்கது

அரசுப் பள்ளிகளில் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உயர்த்தப்பட்ட வயது உச்சவரம்பை, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு! Promulgation of an ordinance extending the increased age limit for direct appointment employees in government schools to direct appointments in government-aided schools! பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது தமிழ்நாடு - அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதியுதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கும் விரிவுபடுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது CLICK HERE TO DOWNLOAD அரசாணை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.