பட்ஜெட்டில் கல்விக்கு என்னென்ன திட்டங்கள்? எவ்வளவு நிதி ஒதுக்கீடு? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 18, 2024

பட்ஜெட்டில் கல்விக்கு என்னென்ன திட்டங்கள்? எவ்வளவு நிதி ஒதுக்கீடு?



பட்ஜெட்டில் கல்விக்கு என்னென்ன திட்டங்கள்? எவ்வளவு நிதி ஒதுக்கீடு? What are the plans for education in the budget? How much funding?

தமிழக பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கல்வி மற்றும் கல்வி நிலையங்கள் மேம்பாடு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

உயர்கல்வித் துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,0742 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நான் முதல்வர் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சி மையங்கள் சென்னை, கோவை, மதுரையில் அமைக்கப்படும். மத்திய அரசு பணியில் சேர ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதன் மூலம் சென்னை, கோவை, மதுரையில் இளைஞர்களுக்கு வங்கிப்பணி, ரயில்வே பணிக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக்குகள் தரம் உயர்த்தப்படும்.

ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழக் ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

நான் முதல்வர் திட்டத்தில் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.200 கோடியில் திறன் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

கோவையில் தகவல் தொழில் நுட்பபூங்கா 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடியில் அமைக்கப்படும்.

மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரி, விடுதிக் கட்டணங்களை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு

“அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும்”

அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

“உண்டு உறைவிட மாதிரி பள்ளிகளில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு;

இல்லம் தேடி கல்வி திட்டம் 2ம் கட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு”

பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும்

▪️ இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு

▪️ பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு “க.அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி பள்ளி கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு”

உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் 6-12 வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ₹1000 உதவித்தொகை!

முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

₹300 கோடி மதிப்பீட்டில் 15000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும்!

45 பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்

மாற்று பாலினத்தவரின் கல்லூரி, விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.