SSLC AND 12TH CBSE BOARD EXAM YEARLY TWICE IN INDIA / விரைவில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 20, 2024

SSLC AND 12TH CBSE BOARD EXAM YEARLY TWICE IN INDIA / விரைவில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்

விரைவில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் 2025-26ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு.

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

The Union Minister has announced that public examinations for class 10 and 12 students will be conducted twice a year. - 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சகமானது கடந்த 2023 ஆம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்றும், மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.


மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு குறித்த மாணவர்களின் பதட்டத்தை தணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை எழுத அனுமதிக்கும் திட்டம் வரும் 2025 – 26 ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.