அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.1000/- செலவில் முழு உடல் பரிசோதனை - அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 13, 2024

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.1000/- செலவில் முழு உடல் பரிசோதனை - அரசாணை வெளியீடு



50 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.1000/- செலவில் முழு உடல் பரிசோதனை - அரசாணை வெளியீடு!! Full Physical Examination for Government School Teachers once in 3 years at a cost of Rs.1000/- - Issue of Ordinance

பள்ளிக்கல்வி - அறிவிப்புகள் - மாண்புமிகுமுதலமைச்சர்அவர்களின் 01.03.2023 அன்றைய செய்தி வெளியீட்டு அறிவிப்பு - "அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். "என்பதனை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கி ஆணை - வெளியிடப்படுகிறது

அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு வெளியிட்ட அறிவிப்புக்கான அரசாணை வெளியீடு

முதற்கட்டமாக 50 வயதைக் கடந்த 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி. ஒரு ஆசிரியருக்கு ₹1000 வீதம் நிதி ஒதுக்கி, தேசிய ஆசிரியர் நலநிதியில் இருந்து இச்செலவினத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது 1. Complete Haemogram
2. ESR, Urine Analysis
3. Blood Sugar F & PP
4. Urea, Creatinine, Uric Acid
5. LIPID Profiles
6. Total Cholesterol (HDL and LDL)
7.Triglycerides, Total Cholesterol / HDL ratio
8. LIVER Function Test
9. Serum Bilirubin (total & direct)
10. AST, ALT, SAP, Total Protein & Albumin
11. HbsAg
12 Blood Grouping & Typing
13. ECG
14. X-Ray Chest
15 USG Abdomen
16.Pap Smear
CLICK HERE TO DOWNLOAD ரூ.1000/- செலவில் முழு உடல் பரிசோதனை - அரசாணை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.