ஆசிரியர் பணியும் அஸ்திவாரமும் - கட்டுரை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 3, 2024

ஆசிரியர் பணியும் அஸ்திவாரமும் - கட்டுரை!



ஆசிரியர் பணியும் அஸ்திவாரமும் - கட்டுரை!

ஆசிரியர்களைப் பற்றிப் போற்றிப் புகழும் பதிவுகளும் தூற்றி இகழும் செய்திகளும் குறைவில்லாமல் வந்து அலை மோதி ஊடகங்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கின்றன.

ஆசிரியர்களும் தத்தமது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி ஓய்ந்து விட்டனர். ஒரு ஆசிரியையாக, எங்கள் தரப்பினரின் உழைப்பையும், மாணவர் நலம் காக்கும் முயற்சியையும் பற்றி இன்னொரு முறை கூறலாம் என்று வந்திருக்கிறேன்.

ஆசிரியப் பணியின் மேன்மை, அது எத்தனை தூய்மையான பணி, சமூகத்தின் அஸ்திவாரமானது என்றெல்லாம் நான் பேச வரவில்லை. எங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறேன். அவ்வளவுதான். ஆசிரியர்கள் என்றால், சர்வ அலங்காரங்களுடன் பள்ளிக்குச் சென்று குளுகுளு அறையில் வகுப்பெடுத்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள் என்பது போலவும், ஒரு ஆசிரியருக்கு முதல் மாதச் சம்பளமே லட்சக்கணக்கில் வருவது போலவும், விடுமுறை கொட்டிக்கிடக்கும் துறையிது எனவும் பொதுமக்களிடையே கருத்துகள் நிலவுகின்றன. மட்டுமன்றி, ஆசிரியராகப் போனால், பாடம் நடத்துவது தவிர வேறு எந்த வேலையுமற்ற சொகுசான நிலையிலிருக்கலாம் என்பது அவர்களது முக்கியமான நிலைப்பாடு. சற்றுச் சிந்தித்தால், அவரவர் பணியிலிருக்கும் சிரமங்களை உணர இய லும். ஆசிரியர்களின் போராட்டங்கள் நியாயமானவை என்பது தெரியும்.

மற்ற வேலைகளைப் போலன்றி, உயிரும் உணர்வுமுள்ள சின்னஞ்சிறு மனிதர்களை வளர்த்தெடுத்து, சமூகத்திற்கு அனுப்பி வைக்கும் அற்புத ஆக்கப் பணி யிது. ஆதலால், மிகுந்த பொறுமையும் அன்பும் குழந்தைகளிடம் அக்கறையுமாகத் தான் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நாளையும் முன்னெடுத்துச் செல்கிறார். காலையில் ஆன்லைன் அட்டென்டன்ஸ் முடிக்க வேண்டியிருக்கும்போது கூட, விடுபட்ட மாணவர்களுக்காகக் காத்திருப்பது தொடங்கி, assessment-ஐ ஒவ்வொரு மாணவரும் வெற்றிகரமாக முடிக்கப் பாடுபடுவது வரை, அவர்கள் ஒவ்வொருவரின் தலைவலி, உடல் வலி, வயிற்றுவலிகளை சரிசெய்ய டாக்டரிடம் கூட்டிச் செல்வது தொடங்கி, வீட்டில் அவர்கள் சந்திக்கும் மனப் போராட்டங்கள் மற்றும் பாலியல் தொல்லைகளுக்குக் கவுன்சலிங் தருவது வரை எல்லாமே நாங்கள் தான்.

மாணவர்கள் சரிவர பள்ளிக்கு வர வில்லை என்றால் உடனே சரிபார்த்து, phone செய்ய வேண்டும். பெற்றோர்கள் அழைப்பை ஏற் பது அத்தி பூத்தாற் போலத்தான் நடக்கும். அப்ப டியே ஏற்றாலும், 'ஏங்க எங்க வேலயக் கெடுக்க றீங்க? நாங்க என்ன பண்றது? அவன் வரமாட் டேங்குறான்' என்று எரிச்சல் பூசிய பதிலை எதிர் கொள்ள வேண்டும். அத்துடன் நில்லாது, வீட்டுக் குச் சென்று பூட்டிய வீட்டைப் பார்த்தும் மனம் தளராமல் அக்கம்பக்கத்தில் விசாரித்து, மீண்டும் மீண்டும் படையெடுத்து, அவர்களை எப்படியே னும் சந்தித்து உளவியல் ரீதியாகப் பேசிப் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். புத்தகங்கள், புத்தகப்பைகள், ஜியோமெட்ரி பாக்ஸ்கள், அட் லஸ்கள், நோட்டுகள், ஷூ, சாக்ஸ்கள் என எல்லா வற்றையும் மாணவர்களுக்குக் கொடுத்து, அது பற்றிய கம்ப்ளீட் டீடெய்ல்ஸை EMIS app இல் பதிவேற்றம் செய்ய வேண்டும். EMIS app-இல் மாணவர்களின் முழுத் தகவல்களையும் (பெயர் மற்றும் முழுமை

யான விபரங்கள், ஆதார் எண், bank account

details, phone number, एकी, blood group,

அப்பா, அம்மாவின் ஆதார் உள்ளிட்ட விபரங்கள்,

புகைப்படம்....etc...) சரிபார்த்துப் பதிவேற்றுவதுடன், ஒவ்வொரு term மதிப்பெண்களும் பதிவேற்றப்பட வேண்டும்.இதெல்லாமும் ஆசிரியர்களின் வேலையே. ஆசிரியர்கள் maintain செய்ய வேண்டிய records ஏராளம். ஒவ்வொன்றும் பல மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும் தன்மையது. அது போக, கல்வி இணைச் செயல்பாடு கள், கல்வி சாராச் செயல்பாடுகள், பல்வேறு போட்டிகள், பள்ளியில் நடைபெறும் பற்பல விழாக்கள் ஆகியவை செவ்வனே நடந்தேற ஆசிரியரே பொறுப்பு. பாடம் நடத்துவது மட்டுமே போதாது ஒரு வகுப்பறையை வழிநடத்த. மாணவர் களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்து முன் நடத்த வேண்டும். பொருளாதார, சாதி பேத, இன்ன பிற மனரீதியான வேறுபாடுகளால் அவர்களுக்குள் நிகழும் நட்புச் சிக்கல் களை, ego- வைச் சரி செய்ய வேண்டும். காலையில் மாணவனின் முகத்தைப் பார்த்தே அவன் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறானா இல்லையா எனக் கண்டறிந்து, அவன் பசியோ டிருந்தால், அதைப் போக்க வேண்டும். இல்லையெனில் பாடம் நடத்திப் பயனில்லை. சிங்கிள் பேரண்ட் சில்ரன் இங்கு ஏராளம். அரசுப் பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியப் பெருமக்கள் இந்த விஷயத்தைப் பற்றி அறிந்திருப்பார்கள். அந்த மனக்குறையால் ஏங்கித் தடம் மாறும் மாணவ, மாணவியரைப் பண்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பாட ஆசிரியரும் அந்தந்தப் பாட சிலபஸ் முடிக்கப்படும் பாடு மிகப்பெரிது. ஒரு வகுப்பில் நன்றாகப் படிப்பவர்கள், சுமாராகப் படிக்கும் ரகத்தினர், மிக மெல்லப் புரிந்து கற்பவர்கள் மற்றும் சிந்தனைச்சவால் உள்ள குழந்தைகள் எனப் பலவகை யான மாணவ, மாணவியருக்கு inclusive education தந்தாக வேண்டும். அதற்கான நேரமோ மிகக் குறைவு.

இதற்கிடையில் பல போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்ய வேண்டியதும் உள்ளது.

இரும்புச்சத்து மாத்திரை, De worming tablets தருவது, அவர்களது உயரம், எடை, BMI, பார்வைத் திறன் குறித்த records பராமரிப்பு மற்றும் தடுப்பூசிகள்.... etc.... இதெல்லாமும் எங்கள் பணியே.

பொதுத்தேர்வுக்கென அடித்துப் பிடித்துச் சிறப்பு வகுப்புகள் எடுத்தாக வேண்டும். பல சவால்களைக் கடந்துதான் மாலை வகுப்புகள், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுத்தாக வேண்டும். குழந்தைகளின் டி.வி., செல்ஃபோன் மற்றும் பிற விளை யாட்டு மோகங்களையும் சினிமா ஈர்ப்பையும் தாண்டி அவர்களுக்குக் கல்வி கற்பித்தாக வேண்டும். மாலை வகுப்புகள் மற்றும் சிறப்பு வகுப்புகளின்போது அவர்களுக்கு சுண்டல் போன்ற பசியாற்றும் சத்துணவுகளை நாங்கள் எங்கள் செலவில் வழங்குகிறோம். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்திற்கு long size நோட்டுகள் மட்டுமே 10 நோட்டுகள் வரை தேவைப்படும். இத்தனை வாங்க இயலாதவர்களுக்கு ஆசிரியர்கள் தான் தாமே வாங்கித் தந்து உதவுகின்றனர்.

தேர்வுக்கு அனுப்புவது வரை அதுவும் ஒரு பிரசவம்தான். கையெழுத்துப் போடத் தெரியாத பெற்றோர்களிடமிருந்து வரும் அந்தக் குழந்தைகள் படித்துப் பட்டதாரிகளாகித் தம் குடும்பத்தின் தம் தலைமுறையின் தலையெழுத்தை மாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கை கொண்டு கற்பிக்கிறோம். யாரையும் degrade செய்து பரீட்சை எழுத விடாமல் விரட்டிவிடு வதில்லை.

தேர்வு எழுத வைப்பதில் உள்ள சவால்களை மீறி, அந்த விடைத்தாள்களைக் கொண்டு சேர்த்து, shuffle செய்து, விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணி செய்து, எல்லாம் முடித்து ரிசல்ட் வருவது என்பது கஜப்பிரசவம். Shuffling பணியேற்கும் ஆசிரியர்கள் உண்மையிலேயே மனமார்ந்த பாராட்டுகளுக்கு உரியவர்கள்.

இது போக தேர்தல் பணி....அது ஒரு பெரும் அத்தியாயம். அதைத் தனியாக எழுத வேண்டும். சொல்லாததும் உண்மை. எல்லாம் சம்பளத்துக்காகத்தானே செய்யறீங்க என்பவர்களுக்கு....

தாய்மை உணர்வோடு இணைந்தது இப்பணி. சம்பளம் மட்டும் எங்கள் ஆன்மா வைத் திருப்தியடையச் செய்வதில்லை. மாணவர்கள் என்றேனும் ஒரு நாள் நினைவுகூர்ந்து, டீச்சர் நீங்க தான் எங்க நல்ல வாழ்க்கைக்குக் காரணம் என்கிறார்களே... அப்போது விழவில் பெருகும் ஆனந்தக் கண்ணீர்... சொல்லிப் புரியவைக்க முடியாது.



(இன்னும் பேசலாம்)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.