அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு - செய்தி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 5, 2024

அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு - செய்தி வெளியீடு

அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு. Pongal bonus announcement for government employees, teachers.

செய்தி வெளியீடு

2022-2023-ஆம் ஆண்டிற்கான

'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம்

'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப

ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு

மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதன்படி, 1) 'சி' மற்றும் 'டி' பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

2) தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள். மற்றும் 2022-2023- நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

3) "சி" மற்றும் "டி" பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள். முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

மேற்கூறிய மிகை ஊதியம்/பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு 167 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.