மாணவர்களுக்கு ‘இளம் கவிஞர் விருது’ - மாவட்ட அளவில் நவம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது 'Young Poet Award' for students - Kalviseithi Official

Latest

Monday, November 20, 2023

மாணவர்களுக்கு ‘இளம் கவிஞர் விருது’ - மாவட்ட அளவில் நவம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது 'Young Poet Award' for studentsமாணவர்களுக்கு ‘இளம் கவிஞர் விருது’ - மாவட்ட அளவில் நவம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது 'Young Poet Award' for students - district level will be held on November 23

பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழக அரசின் அறிவிப்புபடி, 2022-23-ம் கல்வியாண்டு முதல் மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து ‘இளம் கவிஞர் விருது’ மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒன்றியளவில் கவிதைப் போட்டிகள் நடத்தி, அதில் சிறந்ததலா 3 மாணவ, மாணவிகளை தேர்வு செய்ய வேண்டும்.


அவர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை போட்டிகள் நவம்பர் 23-ம் தேதி நடத்தப்படும். அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தேர்ந்தெடுக்க வேண்டும். தொடர்ந்து மாவட்ட அளவில் தேர்வான மாணவர்களுக்கு மாநில அளவிலான கவிதைப் போட்டிகள் சென்னையில் நவம்பர் 30-ம் தேதி நடைபெறும். அதில் மாநில அளவில் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மகாகவி நினைவு தினத்தன்று இளம் கவிஞர் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.