எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி - அளித்தல் சார்ந்து -மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 17, 2023

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி - அளித்தல் சார்ந்து -மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் செயல்முறைகள்



Training of State-Level Principal Examiners for Numeracy and Literacy Third Semester – Delivery-Dependent – State Educational Research and Training Institute Director Processes - எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி - அளித்தல் சார்ந்து -மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் செயல்முறைகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்.

சென்னை-600 006. ந.க.எண்: 2411/எஃப்2/2021 நாள். 16 .11.2023 பொருள்:

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்-2023- 2024 ஆம் கல்வியாண்டு எண்ணும் எழுத்தும் சார்ந்து மூன்றாம் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி – DIET கல்வியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பாக.

பார்வை:

2022 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்கள் (1 முதல் 3 ஆம் வகுப்பு). தமிழ். ஆங்கிலம், கணிதம், அறிவியல். மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு (4 மற்றும் ஆம் வகுப்பு) மூன்றாம் பருவத்திற்கான பாடப்பொருள் 5 உருவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் சார்ந்து மூன்றாம் பருவத்திற்கான மாநில. மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கத் திட்டமிடப்பட்டு.

முதற்கட்டமாக, மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சியினை மதுரை மாவட்டத்தில், நாகமலை புதுக்கோட்டை, பில்லர் பயிற்சி மையத்தில் 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 29.11.2023 மற்றும் 30.11.2023 ஆகிய இரு நாட்களிலும் மற்றும் 4 & 5ஆம் வகுப்பிற்கு 01.12.2023 மற்றும் 02.12.2023 ஆகிய இரு நாட்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இணைப்பில் மாவட்ட வாரியாக முதன்மை கருத்தாளர்களின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இப்பெயர் பட்டியலில் உள்ள தகுந்த ஆர்வமிக்க, எண்ணும் எழுத்தும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கும் ஆசிரியர்கள், கற்றல் கற்பித்தலில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்படும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் DIET கல்வியாளர்களை பயிற்சியில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

எனவே பயிற்சி நடைபெறும் மையத்திற்கு முதல் நாள் இரவு 08.00 மணிக்குள் வருகை புரிதல் வேண்டுமெனவும், பங்கேற்பாளர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக பணி விடுவிப்பு செய்து அனுப்புமாறு சார்ந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்தாளர் பயிற்சி 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 04.12.2023 மற்றும் 05.12.2023 ஆகிய இரு நாட்களிலும் மற்றும் 4 & 5 ஆம் வகுப்பிற்கு 06.12.2023 மற்றும் 07.12.203 ஆகிய இரு நாட்களிலும் நடத்திடுமாறும், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்ட அளவிலான பயிற்சிக்கு திட்டமிடுவதற்கு 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 01.12.2023 மற்றும் 02.12.2023 அன்றும், 4 & 5 ஆம் வகுப்பிற்கு 04.12.2023 மற்றும் 05.12.2023 அறிவுறுத்தப்படுகிறது.

அன்றும் திட்டமிடல் கூட்டத்தை நடத்திடுமாறும் இக்கருத்தாளர் பயிற்சிக்கான செலவினத்தை அந்தந்த நிறுவன திட்டம் மற்றும் செயல்பாடுகள் (Programme and Activities) நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தங்கள் நிறுவன Programme and Activities நிதியில் போதிய நிதி இல்லாத பட்சத்தில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரிடம் உத்தேச செலவின விவரத்துடன் நிதியினை கோரி பெற்றுக் கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.