BEO to HS HM Promotion Panel Preparation Proceedings by DEE - அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களில் 3% காலி பணியிடங்களை வட்டார கல்வி அலுவலர்களைக் கொண்டு நிரப்புதல் சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செய்லுமுறைகள், சென்னை -06 ந.க.எண்.027718/01/2023, நாள். (4 11.2023
பொருள்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி 01.01.2023 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் தொடர்பாக.
பார்வை -
1. அரசாணை (நிலை) எண்.182. பள்ளிக் கல்வித் (ஜி1) துறை, நாள் 25.07.2007
2. அரசாணை(நிலை) எண்.127. பள்ளிக் கல்வித் துறை, நாள்.25.05.2012
பார்வை மற்றும் இல் கண்டுள்ள அரசாணைகளில் 1 2 அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப் பணியிடங்களில் 3% விழுக்காடு காலிப்பணியிடங்களை வட்டாரக் கல்வி அலுவலர்களைக் கொண்டு பணிமாறுதல் மூலம் நிரப்பிட ஆணையிடப்பட்டுள்ளது.
வட்டாரக் கல்வி அலுவலர்களை பணிமாறுதல் மூலமாக 3 விழுக்காடு அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களில் நியமனம் செய்ய 01.01.2023 நிலவரப்படி 31.12.2008க்கு முன்னர் வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் சேர்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள விண்ணப்பத்தில் பெற்று நடைமுறையில் உள்ள விதிகளின் படி பரிசீலினை செய்து, தகுதிவாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்களை மட்டும் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 21.11.2023க்குள் இவ்வியக்ககம் வந்து சேரும் வண்ணம் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
- படிவம் மற்றும் விண்ணப்பம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.