அரையாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் - பள்ளிக்கல்வித்துறை தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 19, 2023

அரையாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் - பள்ளிக்கல்வித்துறை தகவல்

அரையாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் - பள்ளிக்கல்வித்துறை தகவல்

6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிக ளுக்கு காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் நடைமுறை கொண்டு வரப்பட்டு இருக் கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வும் இதே போல், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட் டது. அதன்படி, 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிக ளுக்கு அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) 11- ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

தேர்வுக்கு முந்தைய நாளில் அந்தந்த பாடங்களுக்கான வினாத்தாளை'எமிஸ்'என்றதளத்தில் இருந்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 14417 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதுபற்றி பதிவு செய்யவேண்டும் என் றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரையாண்டு தேர்வுகள் முடிந்து, டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிக ளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குவதற்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவேண்டும் என்றும் அறிவு றுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.