'எமிஸ்' தளம் வாயிலாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்களின் பெயர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் - பள்ளிகளுக்கு, அரசு தேர்வுத்துறை உத்தரவு - Kalviseithi Official

Latest

Sunday, November 19, 2023

'எமிஸ்' தளம் வாயிலாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்களின் பெயர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் - பள்ளிகளுக்கு, அரசு தேர்வுத்துறை உத்தரவு

'எமிஸ்' தளம் வாயிலாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்களின் பெயர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் பள்ளிகளுக்கு, அரசு தேர்வுத்துறை உத்தரவு

சென்னை, நவ.20- நடப்பு கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1 வகுப் புக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் தொடங்கிநடைபெற உள்ளது. இந்தநிலையில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளின் பெயர், பிறந்ததேதி, புகைப்படம் உள்ளிட்ட 13 வகையான விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட் டுள்ளது. அதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அவற்றை உடன டியாக சரிசெய்து, வருகிற 30-ந்தேதிக்குள் அந்தப்பணிகளை முடிக்கவேண்டும். எமிஸ் தளத்தில் உள்ள பெயர்பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், இந்தப்பணிகளை தலைமை ஆசிரியர்கள் தங்க ளின் நேரடி கவனத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. பதிவு செய்யப்படும் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்கு வகுப் பாசிரியரும், தலைமை ஆசிரியரும் தான் பொறுப்பேற்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் மதிப்பெண் சான்றி தழ் வழங்கிய பின்னர் திருத்தங்கள் கோரி தேர்வுத்துறைக்கு விண்ணப்பங்களை அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அனைத்து மாணவர் களும் தமிழை மொழிப்பாடமாக எழுதியாகவேண்டும். சி.பி. எஸ்.இ. உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களில் படித்து நேரடி யாக 9 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் சேரும் மாணவ- மாணவிகளுக்கு மட்டும் தமிழ் மொழிப்பாடம் தேர்வு எழு துவதில் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.