அகவிலைப்படி உயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிக்கை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 25, 2023

அகவிலைப்படி உயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிக்கை வெளியீடு

அகவிலைப் படிஉயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிக்கை வெளியீடு

*சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற கூற்றுப்படி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அதே நாள் முதல் வழங்கிய மாண்புமிகு. திராவிட மாடல் முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நன்றி, நன்றி, நன்றி*

________

ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் *இலா தியோடர் ராபின்சன்* அறிக்கை... ------- ------ ----- ----

---- --- ---- ---

*சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம், சொல்லாததையும் செய்வோம்* *எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்கள் நாம் ஏன் வாக்களிக்கவில்லை? என என்னும் வகையில் எல்லார்க்கும் எல்லாம் என்னும் நோக்கில் தமிழ்நாட்டை இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட முன்னோடி மாநிலமாக கொண்டு செல்லும் வளர்ச்சி பாதையில் நித்தம் நித்தம் ஏமாற்று, வெற்று எதிரிகளின் பொய்ப் பிரச்சாரங்களை ஒழித்து பயணிக்கும் விடியலின் முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறது.* *தமிழ் நாட்டில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வித் துறையிலும்,அரசின் அனைத்து துறைகளிலும் பல்வேறு வகையான மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடிய சீர்திருத்தங்களை தமிழ்நாட்டின் எதிரி கட்சிகளாக செயல்பட்டு வரும் கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும், தமிழகத்தை கூறு போட்டும், பொய் மூட்டைகளை பொது வெளியில் உளறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும், தற்போதைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான தளபதி மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் போராடி வரும் ஆசிரியர்கள், அரசூழியர்களை போராட்டக் களத்திற்கு நேரில் சென்று போராட்டங்களை தவிர்த்து பணிக்கு செல்லுங்கள் நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் உங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்கள். அதன்படி அரசின் நிதி நிலமையை பல்வேறு வழிகளில் சீரமைத்து கடந்த சனவரி 2023 அகவிலைப் படி உயர்த்திய அரசு ஆணையில் அறிவிக்கப் பட்டபடி எங்களின் வாழ்வில் சுடரொளி ஏற்றிய மாண்புமிகு விடியலின் முதல்வர் அவர்களுக்கும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தற்போதைய நிதி அமைச்சருமான மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களுக்கும், எங்களின் விடியல் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் ஒன்றிய அரசு வேண்டு மென்றே திட்டமிட்டு பலமாதங்கள் கழித்து வழங்கிய அகவிலைப் படி உயர்வையும்,நிலுவைத் தொகை முழுவதையும் 2023 சூலை திங்கள் முதலே வழங்கி ஆசிரியர்கள்,அரசு ஊழியர் களின் மனதில் இருந்த நம்பிக்கையற்ற போக்கினை தூள், தூளாக உடைத் தெரிந்து எப்பொழுதும், என்றென்றும் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் உற்ற தோழனாக நமது திராவிட மாடல் அரசு செயல்படும் என்பதனை பறைசாற்றியுள்ளார்கள், அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறது*. *மேலும் கடந்த காலங்களில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் இழந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு,உயர்கல்விக்கான ஊக்க ஊதியம், உயர்கல்வி பயின்றோர்களின் பின்னேற்பு அனுமதி, ஊதியக்குழு முரண்பாடுகள் போன்ற நாங்கள் இழந்த அனைத்தையும் வரும் சனவரி 2024 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் நிதி நிலமையை சீர் செய்து எங்களுக்கு வழங்கி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழிவந்த நமது திராவிட மாடல், விடியலின் முதல்வர் அவர்களை நிறை வேற்றித் தருமாறு அய்யா பாவலர் அவர்கள்* உருவாக்கிய *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்* கேட்டுக் கொள்கிறது.

------ ------- ------ ----- -----

....... என்றும் பாவலர் வழியில் இயக்கப் பணியாற்றும்..........

*இலா. தியோடர் ராபின்சன்,

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.