ரூ.1000 உரிமைத் தொகை.. SMS வந்தாலும் அக்கவுண்டில் பணம் வரலையா? இதை பண்ணுங்க உடனே! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 17, 2023

ரூ.1000 உரிமைத் தொகை.. SMS வந்தாலும் அக்கவுண்டில் பணம் வரலையா? இதை பண்ணுங்க உடனே!



ரூ.1000 உரிமைத் தொகை.. SMS வந்தாலும் அக்கவுண்டில் பணம் வரலையா? இதை பண்ணுங்க உடனே!

மாநிலம் முழுவதும், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் களைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைத்தது.

திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது.

முன்னதாக, இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதி சரிபார்க்கப்பட்டு, தகுதயான விண்ணப்பதாரர்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இவ்வாறு, குறுஞ்செய்தி பெற்றவர்களுக்கு கடந்த 14,15ம் தேதிகளில் ரூ. 1000 செலுத்தப்பட்டது.

இருப்பினும், குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றும் சிலருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட வில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எனவே, குறுஞ்செய்தி வரப்பெற்றும் ரூ. 1000 வங்கி கணக்கில் வரவில்லை என்றால், உடனடியாக உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள ரூ.1000 உரிமைத் தொகையில், வங்கிக்கான சேவை கட்டணம் ஆகியவற்றிற்கு பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100 ஐ அழைத்து புகார் அளிக்கலாம்.

இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.