தமிழக அரசு ஊழியர்கள 10,000 பேருக்கு பழைய கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 17, 2023

தமிழக அரசு ஊழியர்கள 10,000 பேருக்கு பழைய கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு!



Promotion for 10,000 Tamil Nadu government employees based on old educational qualification!

தமிழக அரசு ஊழியர்கள் 10000 பேருக்கு பழைய கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அனுமதி அளித்துள்ளது. எஸ்எஸ்எல்சி படித்தவர்கள், அனுபவ அடிப்படையில், மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு பெறலாம்.

அந்த வகையில், 10,000 பேர் தகுதி பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறையில் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு இனி பதவி உயர்வு என்பதுபுதிய விதிதிகளின்படியே நடைபெற போகிறது. இந்த புதிய விதிகள் 2023 ஏப்ரலில் அமலுக்கு வந்தது.

எனினும் அதற்கு முன்பாக பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பதவி உயர்வு பெற முடியாத நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து, பழைய கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க, ஆறு மாதம் அவகாசம் வழங்கி, நகராட்சி நிர்வாகத்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகளில் பணியாற்றும் அதிகாரிகள் சுமார் 10000 பேர் ஒரு மாதத்திற்குள் பதவி உயர்வு பெற போகிறார்கள். இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறைஅதிகாரிகள் கூறும் போது, நகராட்சி நிர்வாகத்தின் புதிய விதிகளின்படி, மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற, பட்டப்படிப்பு கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும். இந்த உத்தரவு கடந்த ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி செய்தால், பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பழைய விதிமுறைகளின்படி பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி.(10ம்வகுப்பு) படித்தவர்கள், அனுபவ அடிப்படையில், மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு பெறலாம். அதன் அடிப்படையில் தமிழகத்தில் புதிதாக 10,000 பேர் பதவி உயர்வு பெற தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு படிப்படியாக பதவி உயர்வு வழங்கப்படும். வரும் காலங்களில், புதிய விதிப்படி தான் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது அதற்கேற்ப பணியாளர்கள், தங்களின் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும்" என அதிகாரிகள் கூறினர்.

10 ஆயிரம் அரசு ஊழியர்கள் பழைய கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு பெற்றுள்ள விஷயம், அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இனிமேல் பதவி உயர்வு என்பது கல்வி தகுதி அடிப்படையில் தான் என்பதால் கல்வித்தகுதியை உயர்த்த அரசு ஊழியர்கள் உயர் கல்வியை அஞ்சல் வழியில் படிக்க ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.