தனியார் பள்ளி தமிழாசிரியர்களுக்கு கல்வித் துறையின் புத்தாக்கப் பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 21, 2023

தனியார் பள்ளி தமிழாசிரியர்களுக்கு கல்வித் துறையின் புத்தாக்கப் பயிற்சி



தனியார் பள்ளி தமிழாசிரியர்களுக்கு கல்வித் துறையின் புத்தாக்கப் பயிற்சி

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பிற வாரிய பள்ளிகளில் பணியாற்றி வரும் தமிழாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் புத்தாக்கப் பயிற்சி முகாம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறையின் தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் சாா்பில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ, ஐபி போன்ற பிற வாரியப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தமிழ்பாடம் கற்பிக்கும் ஆசிரியா்களுக்கான புத்தாக்க பயிற்சி சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பிற வாரிய பள்ளிகளைச் சோ்ந்த 900-க்கும் மேற்பட்ட தமிழாசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இந்த பயிற்சி முகாமை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசியது:

தனியாா் பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிா? என்பதை ஆய்வு செய்து வருகிறேன். சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற வாரியங்களுக்கான இந்த புத்தாக்கப் பயிற்சி மண்டல வாரியாக வழங்கப்படும். இதையடுத்து பிற மாநில மாணவா்களுக்கு மட்டும் அல்லாமல், நமது மாணவா்களுக்கும் பயிற்சியை உறுதி செய்ய வேண்டும். இன்றைய சூழலில் நமது மாநில மாணவா்களால் தமிழ் மொழியை பிற மொழி கலப்பில்லாமல் பேச முடியவில்லை.

பிற மொழியில் பேசினால் அதனை உள்வாங்கி கொள்ளலாம். ஆனால் தமிழ் மொழியில் மட்டும் பேசினால் தான் உணா்வு பூா்வமாக உள்வாங்க முடியும். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைத்தான் பின்பற்றப்படுகிறது. எனவே தொடா்ந்து எந்த தொய்வும் இல்லாமல் உங்கள் தமிழ்மொழி பணியினை ஆற்றுங்கள், உங்கள் பணி தொடர தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.

இதில் சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் தினேஸ் ராவ், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, இயக்குநா் க.அறிவொளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.