பள்ளிகளுக்கு தனிநபர்/நிறுவனங்கள்/தொண்டு நிறுவனங்கள் மூலமாக பொருட்கள் அளிப்பது சார்ந்த அறிவுரைகள் - CEO PROCEEDINGS - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 21, 2023

பள்ளிகளுக்கு தனிநபர்/நிறுவனங்கள்/தொண்டு நிறுவனங்கள் மூலமாக பொருட்கள் அளிப்பது சார்ந்த அறிவுரைகள் - CEO PROCEEDINGS

பள்ளிகளுக்கு தனிநபர்/நிறுவனங்கள்/தொண்டு நிறுவனங்கள் மூலமாக பொருட்கள் அளிப்பது சார்ந்த அறிவுரைகள் பார்வை- - சார்பாக,

தருமபுரி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

பார்வைக்காண் செயல்முறைகளின்படி பள்ளிகளுக்கு தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது. இலவசமாக நூல்கள், இதழ்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரும் பொழுது, மேற்கண்ட செயல்பாடுகளை நம்ம ஸ்கூல் பௌண்டேஷன் மூலமாக வழங்குமாறு சார்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறும், நம்ம ஸ்கூல் பௌண்டேஷன் அனுமதி பெற்ற பிறகே மேற்கண்ட செயல்பாடுகளை செயல்படுத்துமாறும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கீழ்கண்ட அறிவுரைகளை செயல்படுத்துமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

1. பள்ளியில் பயின்ற அனைத்து முன்னாள் மாணவர்களையும் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் சேர்ந்து நன்கொடை அளிக்க கோர வேண்டும்.

2. பள்ளிக்கு தேவையான தேவைகளை NSNOP மூலம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

3. NSNOP தளத்தில் தங்கள் பள்ளிக்காக இருக்கும் தேவையற்ற பதிவுகளை உடனே நீக்க வேண்டும்.

4.நன்கொடையாளர்களை அணுகி பள்ளிக்கு தேவையான உதவிகளை NSNOP மூலம் பெற வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.