தற்காலிக பேராசிரியர் நியமனம்; குறுக்கு வழி என பட்டதாரிகள் குமுறல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 18, 2023

தற்காலிக பேராசிரியர் நியமனம்; குறுக்கு வழி என பட்டதாரிகள் குமுறல்



தற்காலிக பேராசிரியர் நியமனம்; குறுக்கு வழி என பட்டதாரிகள் குமுறல்

அரசு கல்லுாரிகளின் பேராசிரியர் நியமனங்களில், யு.ஜி.சி., விதிகளை பின்பற்றுவதற்கு பதில், தற்காலிக பணி நியமனங்கள் அதிகரித்துள்ளதால், பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 7,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.

பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், ஆசிரியர் பதவியில், 1,000த்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.

இந்த இடங்கள் அனைத்தும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வழியே நிரப்பப்படும் என, பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், புதிய பணி நியமனங்களை மேற்கொள்வதற்கு பதிலாக, தற்காலிக காலியிடங்களை அதிகரித்தும், அதற்கான சம்பளத்தை அதிகரித்தும், உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாதம், 20,000 ரூபாய் ஊதியத்தில், 702 இடங்களுக்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாதம், 25,000 ரூபாய் ஊதியத்தில், 347 இடங்களுக்கும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், கவுரவ விரிவுரையாளர் என்ற தற்காலிக ஆசிரியர் பணியில், இதுவரை, 4,000 ஆக இருந்த எண்ணிக்கை, 7,374 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இவர்களுக்கு மாதம், 25,000 ரூபாயாக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில், நிரந்தர ஆசிரியர்களை நியமித்தால், தற்போது வழங்கப்படுவதை விட இரண்டு மடங்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டியிருக்கும்.

இந்நிலையில், தற்காலிக பணி நியமனம் அதிகரிப்பால், நிரந்தர பணிக்கு காத்திருக்கும் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.