அகில இந்திய தொழிற்பயிற்சி தேர்வு; தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 17, 2023

அகில இந்திய தொழிற்பயிற்சி தேர்வு; தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு



அகில இந்திய தொழிற்பயிற்சி தேர்வு; தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரம் மாவட்டம் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்

இது குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; 2023ம் ஆண்டு ஜீலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள கீழ்க்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல் வகை (Category I):

தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்: ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ITI-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் Allied தொழிற்பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறும் பொருட்டு தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். இரண்டாம் வகை (Category II):

திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்: திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற (COE NTC) பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

மூன்றாம் வகை (Category III):

ஆகஸ்ட் 2018-க்கு முன் SCVT சேர்க்கை பெற்றவர்: ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழுமம் (SCVT) தொழிற்பிரிவில் பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

நான்காம் வகை (Category IV): பிற விண்ணப்பதாரர்கள்

விண்ணப்பதாரர் 18.09.2023 அன்று 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

தொழிற்பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற் சாலை சட்டம் 1984-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு/உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற் பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். SCVT திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 2019-ஆம் ஆண்டு முதல் சேர்க்கை செய்யப்பட்டு மாநில தொழிறபயிற்சி குழுமம் (SCVT) தொழிற்பிரிவு பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த Category IV -இன் படி கீழ் தனித்தேர்வராக விண்ணப்பித்து, முதன்மைத்தேர்வு இன்றி நேரடியாக அகில இந்திய தொழிற் தேர்வு அனுமதிக்கப்படுவர்.

தனித்தேர்வராக தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர் நிலையத்திலுள்ள அத்தொழிற்பிரிவிற்குரிய குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ள I (allied trade) & IV (Experienced Candidates) வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) தேர்வு 10.10.2023 மற்றும் செய்முறை (Practical) தேர்வு 11.10.2023 ஆகிய தேதிகளில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இத்துறையால் நடத்தப்படும். கருத்தியல் தேர்வு descriptive Type-ல் இடம்பெறும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் கலந்து கொள்ள இயலும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜீலை 2024-இல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வராக (Private Candidates) கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தொழிற் பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுவர்களுக்கு NCEVT புது டெல்லி மூலம் தேசிய தொழிற் சான்றிதழ் (National Trade Certificate) வழங்கப்படும். தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு (Prospectus) ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதற்கான தேர்வு கட்டணத்தை (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) www.karuvoolam.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாகவோ அல்லது தமிழக அரசின் கருவூலம் பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளை வழியாகவோ e-Challan மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைய வழியாக தேர்வு கட்டணம் ரூ 200/- செலுத்தியமைக்கான செலுத்துச் சீட்டு (e-Challan) கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 18.09.2023-க்குள் கீழ்கண்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.