தமிழகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 19, 2023

தமிழகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு



31.07.2023-ன் படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்களது விவரங்கள் - Employment Exchange Statistics - Live Register status as on 31st July 2023 -

CLICK HERE TO DOWNLOAD TAMIL PDF

CLICK HERE TO DOWNLOAD ENGLISH PDF

தமிழகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

66 லட்சம் பேர் காத்திருப்பு:

தமிழகத்தில் உயர் கல்வி படிப்பு முடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி மற்றும் உயர்கல்வி முடித்து வெளியே வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் வருடன் தவறால் வேலைவாய்ப்பு அலுவலங்களில் தங்களின் பதிவை புதுப்பித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. இதுதவிர சென்னையில் கூடுதலாக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன.

பட்டப் படிப்பு வரையான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுநிலை படிப்பு, பொறியியல், மருத்துவம் உட்பட தொழில் படிப்பின் தகுதியைசென்னை அல்லது மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும். இந்தப் பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வரவேண்டும்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மொத்தம் 66 லட்சத்து 55 ஆயிரத்து 766 பேர்  அரசு வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.