நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் 23 மாணவர்கள் தற்கொலை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 19, 2023

நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் 23 மாணவர்கள் தற்கொலை!


How many students died because of NEET in Tamilnadu?
Why many students fail in NEET?
Why many people fail in NEET?
How many students fail in NEET every year?
How many students died because of NEET in India?


நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் 21 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளனர்.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் ஏற்பாட்டில் கட்சியின் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உத்தரமேரூர் எம்.எல்.ஏ. கா. சுந்தர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  எம்.பி. க. செல்வம், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி பங்கேற்று, ஆட்டோ ஓட்டுநர்கள் 538 பேருக்கு சீருடை மற்றும் மளிகைப்பொருள்கள்  வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட அரசு பள்ளிகளில், பயின்று அதிக மதிப்பெண் பெற்ற  52 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். 


தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்து இருந்தோம். அந்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றதால் இதுவரை 21 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 

சட்டப்பேரவையிலும் இருமுறை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தும், ஆளுநர் அந்த மசோதாவில் கையெழுத்திடாமல் இருந்து வருகிறார்.

எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.