பள்ளிக் கல்வி இயக்ககம் - ஜூன் 27 & 28 ஆகிய நாட்களில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுரைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 4, 2023

பள்ளிக் கல்வி இயக்ககம் - ஜூன் 27 & 28 ஆகிய நாட்களில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுரைகள்!



பள்ளிக் கல்வி இயக்ககம் - ஜூன் 27 & 28 ஆகிய நாட்களில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுரைகள்! - Directorate of School Education - Instructions given during the meeting of Principal Education Officers and District Education Officers held on 27th & 28th June!

பள்ளிக்கல்வி 27 & 28082023 அன்று நடைபெற்ற கல்வி அலுவலர்கள் கூட்டத்தின்போது வழங்கப்பட்ட அறிவுரைகள்:

இயக்ககம், சென்னை-06

முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் 1. மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்கள் சார்பான விவரக் கையேடு பள்ளிகளின் எண்ணிக்கை, பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, காலிப்பணியிடம், இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள், பள்ளி கட்டிடப் பணிகள் நடைபெறும் விவரங்கள் (தற்போதைய நிலை) பணிமேற்கொள்ளும் துறை, ஒரு வகுப்பறை கூட இல்லாத பள்ளிகள், கூடுதல் வகுப்பறை தேவை காரணமாக வகுப்பறைக்கு வெளியே நடைபெறும் வகுப்புகள், தலைமை ஆசிரியர்களின் அலைபேசி எண்கள் போன்ற அடிப்படை விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். முதன்மைக்கல்வி அலுவலர்கள் CUG அலைபேசி எண் பயன்படுத்த வேண்டும். 2 பள்ளி மாணவர்கள் நலத்திட்டங்கள் இருப்பு மையங்கள், இருப்பு வைக்கப்பட்டுள்ள நலத்திட்ட பொருட்கள் விவரம் அனைத்து நலத்திட்டங்களும் உரிய மாணவர்களுக்கு சென்றடைதலை உறுதி செய்தல் முதன்மைக்கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் இதற்கு பொறுப்பு அலுவலர் ஆவார். இவர் மாவட்ட அளவிலான கண்காணிப்பு இருப்பு பதிவேட்டினை பராமரிக்க வேண்டும்.

3 LMS Entry. அனைத்து வழக்கு விவரங்களும் சரியான ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்-உரிய காலத்தில் எதிர்வாதவுரை தாக்கல் செய்தல், நீதிமன்ற தீர்ப்பாணை பெறப்பட்டவுடன், தேவைப்படும் நேர்வுகளில் உடன் அரசு வழக்கறிஞரின் சட்ட கருத்து பெற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். இச்செயல்பாடுகள் அனைத்தும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

4. பல்வேறு நேர்வுகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டபின், மேல்முறையீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஏற்புடையதல்ல. இந்நிகழ்வுகள் நீதிமன்றத்தால் கண்டிக்கப்படுகிறது. எனவே, அரசு வழக்குரைஞரின் அறிவுரைப் பெற்று உரிய காலத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அலுவலர்கள் உறுதிபடுத்த வேண்டும்.

5. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டிருப்பின், அரசு வழக்கறிஞரின் அறிவுரையை பெற்று தீர்ப்பாணை பெறப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை எடுத்துரைத்து) நீதிமன்றத்தில் உரிய பிராமண பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 6. ஒவ்வொரு வாரமும், நீதிமன்ற வழக்குகள் குறித்து தங்கள் அலுவலகம் மற்றும் பிறசார்நிலை அலுவலங்களின் பணியாளர்களிடம் மீளாய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின்போது இணையத்திலிருந்து வழக்கின் தற்போதைய நிலை குறித்த தகவலினை பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்து, கோப்பில் அலுவலரின் குறிப்புரை இடம் பெற வேண்டும். மேலும், ஒவ்வொரு வழக்கும் கேட்பிற்கு வரும் நாளன்று சார்ந்த தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு அரசு வழக்கறிஞருக்கு உரிய தகவலை அளிக்க வேண்டும்.

7. புதிய வழக்குகள் தொடுக்கப்படும் நாளிலேயே அதற்குரிய தகவலினை எழுத்து மூலமாக அரசு வழக்கறிஞர்/தொடர்பு அலுவலருக்கு அளித்து நீதிமன்றத்தில் அனுமதி நிலையிலேயே வழக்கு முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

8. ஆசிரியர்கள் நலன் சார்ந்து அலுவலக விரைவு நடவடிக்கைகள் அனைத்து வகை ஆசிரியர்/ ஆசிரியரல்லாதோர் சார்ந்து பணியிட விவரப்பதிவேடு (Establishment Register) பராமரிக்கப்பட வேண்டும். பணிவரன்முறை செய்தல், தகுதிகாண்பருவம் முடித்து ஆணை வழங்குதல். இதுசார்ந்து உரிய தொடர் கண்காணிப்பு பணிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.(Watch Register) நிலுவை கோப்புகள் அதிகம் இருக்கும் நிலையில் சிறப்பு முகாம்களை நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விதிகளின்படி தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதித்தல் சார்நது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உயர்கல்வி படிப்பதற்கான முன் அனுமதி கல்வியாண்டின் துவக்கத்திலேயே சிறப்பு முகாம் நடத்தி ஆணை வழங்கலாம். மகப்பேறு விடுப்பு முடித்தபின் மீள பணியேற்க அனுமதி உள்ளிட்டவை உடனுக்குடன் ஆணை வழங்கப்பட வேண்டும்.

ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்ந்து விரைவு நடவடிக்கைகள்- தாங்கள் நியமன அலுவலராக உள்ள பதவிகளுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல், தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்குதல் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் மேற்கொள்ளுதல்.

vii. தலைமையாசிரியர்களது GPF விண்ணப்பம் பெறப்பட்ட இரு நாட்களுக்குள் ஆணை வழங்க வேண்டும். ஓய்வூதிய கருத்துருக்கள் மீது நான்கு நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அலுவலக பராமரிப்பு:

1. முக்கிய ஆணைகளின் தொகுப்பு பராமரிக்கப்பட வேண்டும்.

2. தன்பதிவேடு முறையாக ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

3. பகிர்மானப் பதிவேட்டுடன் ஒப்பிட்டு உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நீண்ட நாட்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படாத இனங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

4. தினந்தோறும், நடப்புக் கோப்புகளுடன் நீண்ட நாள் நிலுவைக் கோப்புகளின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

5. மாத வாரியாக நிலுவை சதவீதம் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 6. பதிவறை முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

7. விதிமுறைகளின்படி, முடிவுற்ற கோப்புகளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

8. ஒழுங்கு நடவடிக்கை கோப்புகளை பொறுத்தவரையில், ஒழுங்கு நடவடிக்கை வழிகாட்டுதல்படி, விசாரணை அலுவலர்களை நியமனம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைவுப்படுத்துதல், தற்காலிக பணிநீக்கத்தில் உள்ள ஆசிரியர்கள் சார்ந்து விதிமுறைகளின்படி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல், விதிகளின் படி உரிய கால இடைவெளியில், தற்காலிக பணி நீக்கத்தினை தொடர வேண்டுமா என ஆய்வு செய்து கோப்பில் அலுவலர் உரிய ஆணை வழங்கிட வேண்டும். பள்ளிப் பார்வை:

1. தினந்தோறும் பள்ளிகளில் காலை வழிபாட்டுகூட்டத்தில் பங்கேற்றல்.

2 மாணவர்களுக்கு அறிவுரை வழங்குதல்,

3 ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 15 பள்ளிப் பார்வைகள் மற்றும் 5 ஆண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

4. வகுப்பறை பார்வையின்போது ஆசிரியர் பாடத்தை அறிமுகம் செய்யும் விதம், ஆசிரியர் மாணவர் இடைவினை, கற்பித்தல் நுட்பங்கள் சார்ந்து ஆய்வுக் குறிப்புரையினை செயலியில் பதிவிட வேண்டும்.

5. பள்ளிப் பார்வையின்போது குறைந்தபட்சம் இரு வகுப்பறைகள் உற்று நோக்கல். பள்ளியின் ஒட்டு மொத்த செயல்பாட்டினை மதிப்பிடுதல், கடந்த ஆண்டுகளில் பொதுத்தேர்வு தேர்ச்சியினை மீளாய்வு செய்தல், மெல்ல கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதனை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருதல் வேண்டும்.

6. பள்ளி வளாக பராமரிப்பு, கழிவறை பராமரிப்பு. சுகாதாரமான குடிநீர் வழங்குதல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

7. கல்வி இணைச் செயல்பாடுகள் முறையாக நடைபெறுதல், மன்றச் செயல்பாடுகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்தல்.

8. உடற்கல்வி சார் செயல்பாடுகளை மதிப்பிடுதல்.

NEET உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்குதல் (பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் செயல்திட்டம் வகுத்தல்)

10.6 முதல் 9 வகுப்புகளில் பயின்று வரும் எழுதப் படிக்கத் தெரியாத மாணவர்களுக்கு 3 மாத கால அளவிற்கு தனிப்பயிற்சி வழங்குதல் வேண்டும்.

அர்ப்பணிப்புள்ள ஒரு ஆசிரியர் இதற்கென தனியே நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாசிரியர் மாணவர்களுக்கேற்ப தனித்திட்டம் உருவாக்கி அவர்கள் சரளமாக படிக்கவும், எழுதவும் திறன் பெற்றவர்களாக உருவாக்க தனிப்பட்ட செயல்திட்டம் வகுக்க வேண்டும்.

11. அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், APO, BRTES ஆகியோர் அடங்கிய கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து அலுவலர்களின் பள்ளிப்பார்வை, அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியனவற்றை விவாதித்து உரிய தொடர் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். கூட்ட நடவடிக்கைகள் (Meeting Minutes) பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

12 மாவட்ட அளவில் ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தது மூன்று ஆசிரியர்கள் (PG and BT) அடங்கிய பாட வல்லுநர் குழு உருவாக்கப்பட வேண்டும் இவர்கள் உயர்சிந்தனை

வினாக்கள் உருவாக்குதல், மாவட்ட அளவிலான ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் பணிக்கு பயன்படுத்தலாம்.

13 தலைமை ஆசிரியர்கள் தினந்தோறும் குறைந்தது இரு வகுப்புகளை உற்று நோக்கி ஆய்வு செய்தல் வேண்டும்.

14 மாவட்ட NSS தொடர்பு அலுவலர். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பணிகளை மீளாய்வு செய்தல்,

15. பள்ளி அளவிலான மற்றும் குறுவட்டம் மாவட்ட மையம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் நடத்தி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். CLICK HERE TO DOWNLOAD வழங்கப்பட்ட அறிவுரைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.