பணியமைப்பு சமூகநல ஆணையரகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்-சத்துணவுப் பணியாளர்கள்- 2016,2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற வேலை நிறுத்த காலம் பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கப்பட்டது-போராட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவுப் பணியாளர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்பட்ட விவரம் தெரிவிக்க கோரல் தொடர்பாக- - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 4, 2023

பணியமைப்பு சமூகநல ஆணையரகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்-சத்துணவுப் பணியாளர்கள்- 2016,2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற வேலை நிறுத்த காலம் பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கப்பட்டது-போராட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவுப் பணியாளர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்பட்ட விவரம் தெரிவிக்க கோரல் தொடர்பாக-



Organization Social Welfare Commission Revolutionary Leader M.G.R. Nutrition Scheme-Nutrition Workers- The strike period held in the years 2016, 2017 and 2019 was ordered to be regularized as working period-Regarding the request to provide the details of the wages paid to the nutrition workers who participated in the strike- பணியமைப்பு சமூகநல ஆணையரகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்-சத்துணவுப் பணியாளர்கள்- 2016,2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற வேலை நிறுத்த காலம் பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கப்பட்டது-போராட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவுப் பணியாளர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்பட்ட விவரம் தெரிவிக்க கோரல் தொடர்பாக- பார்வை 1ல் காணும் அரசாணையின் படி 2016, 2017 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போரட்டமானது கீழ்க்கண்ட காலங்களில் நடைபெற்றுள்ளதைத் தொடர்ந்து, இப்போராட்டக் காலங்களானது பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணையிடப்பட்டுள்ளது. வ.எண்

வேலை நிறுத்தப் போராட்டக் காலம்

1) 10.02.2016 முதல் 19.022016 வரை (10 நாட்கள்)

2) 22.08.2017 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

3) 07.09.2017 முதல் 15.09.2017 வரை (19 நாட்கள்)

4) 22.012019 முதல் 30.01.2019 வரை (9 நாட்கள்)

இதைத் தொடர்ந்து, 07.092017 முதல் 15.09.2017 (19 நாட்கள்) வரையிலான நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை விடுமுறை நாட்களில் பணிபுரிந்து ஊதியம் பெற்ற பணியாளர்களுக்கு, இவ்வேலை நிறுத்தக்காலத்தினை பணிக்காலமாக முறைப்படுத்துவதன் காரணமாக மீண்டும் ஊதியம் பெற்று வழங்கும் நிலை எழாது எனவும், ஒழுங்கு (ம) குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுவதாகவும் இவ்வரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் சமூக நல இயக்குநர் ஆகியோர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில், சத்துணவு பணியாளர் சங்கத்தின் சார்பாக, 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்ட காலமானது முறைப்படுத்தப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே சத்துணவுப் பணியாளர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாவட்டங்களில் நாளது வரையில் ஊதியம் பெற்று வழங்கப்படவில்லை எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பார்வை 2 ல் காணும் கடிதங்களின்படி, மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு பணியாளர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்பட்டிருப்பின் அதற்கான சான்றினை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வழங்கிட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், இப்பொருள் குறித்து அரசிற்கு அறிக்கை அனுப்பிட வேண்டியுள்ளதால் இக்கடிதம் கிடைத்த 10 பணி நாட்களுக்குள் தனிக்கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அவ்வாறு உரிய தினங்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை இவ்வியக்ககத்திற்கு கிடைக்கப்பெறவில்லை எனில் சம்பந்தப்பட்ட அலுவலர் (ம) கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.