11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் - பள்ளிக்கல்வித்துறை விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 10, 2023

11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

11th Class General Exam Canceled - Explanation by School Education Department - 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து என்று பரவும் தகவல் உண்மையில்லை என பள்ளி கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு ஆலோசனையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் ஜூன் 12ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதனையொட்டி பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கு பள்ளி கல்வித் துறை பரிசீலித்து வருவதாக தகவல் பரவியது. இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.

அதில், பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து என்று பரவும் தகவல் உண்மையில்லை என்றும் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு ஆலோசனையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்றும் பள்ளி கல்வித் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.