நாளை (06.12.25) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - திங்கள்கிழமை கால அட்டவணை - CEO - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 5, 2025

நாளை (06.12.25) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - திங்கள்கிழமை கால அட்டவணை - CEO



நாளை (06.12.25) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாளாகும், திங்கள்கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் - Tomorrow (06.12.25) is a working day for all types of schools - Monday Timetable - CEO

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,கள்ளக்குறிச்சி மாவட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ந.க.எண்: 718/அ2/2025

:05.12.2025

பொருள்:

பள்ளிக்கல்வி - கள்ளக்குறிச்சி மாவட்டம் அனைத்து வகை பள்ளிகளுக்கும் 24.11.2025 அன்று (திங்கள்கிழமை) மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை ஈடுசெய்யும் பொருட்டு நாளை 06.12.2025 சனிக்கிழமை அன்று பள்ளி வேலை நாளாக செயல்பட ஆணையிடுதல் - தொடர்பாக. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் கனமழை காரணமாக 24.11.2025 அன்று (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனை ஈடுசெய்யும் பொருட்டு நாளை 06.12.2025 சனிக்கிழமை அன்று (திங்கள்கிழமை) கால அட்டவணை பின்பற்றி பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

ஒம்/-கா.கார்த்திகா,

முதன்மைக் கல்வி அலுவலர்.

கள்ளக்குறிச்சி.

பெறுநர்:

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம்

நகல்.

1. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை) - கள்ளக்குறிச்சி.

2. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) - கள்ளக்குறிச்சி.

3. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) - கள்ளக்குறிச்சி.

4. உதவித் திட்ட அலுவலர். ஒருங்கிணைந்த கல்வி - கள்ளக்குறிச்சி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.