Special TET - அறிவிப்பு வாபஸ் ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்..
Special TET - அறிவிப்பு வாபஸ்!
ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என வெளியிடப்பட்ட அறிவிப்பு பின்னர் திரும்ப பெறப்பட்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...
👇👇👇👇
https://www.youtube.com/live/_I2_3M7CmLc?si=HPzp7vkCn2qTL-hI
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருச்சிராப்பள்ளி மாவட்டக் கிளை.
பொதுச்செயலாளர் அவர்களுக்கு வணக்கம்.
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அட்டவணையின் படி இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாள் ஒன்று மட்டுமே எழுத முடியும்.
பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தாள் இரண்டு மட்டுமே எழுத முடியும்
தாள் இரண்டு எழுவதற்கான வாய்ப்பு இடைநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலைக்கு அளிக்கப்படவில்லை.
இது பதவி உயர்வுக்கு தடையாக இருக்கும் என்பதால் இயக்கப் பொதுச்செயலாளர் அவர்கள் இயக்குநர் அவர்களிடம் பேசி அனைத்து வகையான ஆசிரியர்களும் தேர்வினை எழுதுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு பொதுச்செயலாளர் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இவண்
கு.செல்வகுமார்
மாவட்ட செயலாளர்
, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி,
திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை .
*சிறப்பு தகுதித்தேர்வு என்பது 17.12.2012 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே.*
அதன் பிறகு வந்த அதாவது ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை.
பதவி உயர்வு பெற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2ஐ இடைநிலை ஆசிரியர்களும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் எழுதலாம் என்ற திருத்தத்துடன் விரைவில் புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட உள்ளது.
அனைவரும் பொறுமை காக்கவும். 🙏

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.