டிசம்பர் 3 , 2025 - உலக மாற்றுத்திறனாளிகள் தினம் - QR கோடு ஸ்கேன் செய்து உறுதி மொழி எடுத்தல் - SPD Proceedings December 3, 2025 - International Day of Persons with Disabilities - Scan QR Code and Take Pledge - SPD Proceedings
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் உள்ளடக்கிய கல்வி வழங்குதன் சார்ந்து பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 3, 2025 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று மாற்றுத்திறணளிகளின் உரிமைகள், வாழ்வாதாரம். கல்வி, வாய்ப்புகள், உட்பருத்தல் ஆகியவற்றை வலியுறுத்தியும், அனைவருக்கும் சமமான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பின்வரும் செயல்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அ'ஒற்றுமையை வளர்ப்போம்"உறுதி மொழி டிசம்பர் 3, 2025 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இணைப்பு-ல் கண்டுள்ள "ஒற்றுமையை வளர்ப்போம்" என்கின்ற உறுதி மொழியினை அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலை வழிபாட்டில் எடுத்திடல் வேண்டும்.
ஆ. QR கோடு ஸ்கேன் செய்து உறுதி மொழி எடுத்தல் மேலும், இதே உறுதிமொழியினை அனைத்து மாலாஆசிரியர்கள். ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள். இயன்முறை மருத்துவர்கள், ஆயத்த பயிற்சிமைய பணியாளர்கள், பெற்றோர்கள், பிற துறையினர் மற்றும் பிறர் எடுத்து கொள்ள ஏதுவாக இணைப்பு-II ல் QR கோடு வழங்கப்பட்டுள்ளது. இதனை கைப்பேசியினை பயன்படுத்தி ஸ்கேன் செய்து உறுதிமொழியினை எடுத்திடல் வேண்டும். இவ்வாண்டு தமிழ்/ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்திட ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உறுதிமொழி எடுத்தவர் தான் ஆசிரியர்/ மாணவர்/ பெற்றோர்/ பிறர் என்பதனை தெரிவு செய்யலாம். பின்னர் தனது பெயர் மற்றும் கைப்பேசி எண்ணை பதிவிட்டு பாராட்டு சான்றிதழினை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் வேண்டும்.
இந்த QR கோடினை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவகள், பெற்றோர் மற்றும் SMC வாட்ஸ்அப் (Whatsapp) (குரூப் வாயிலாக அனுப்பி அதிக எண்ணிக்கையில் அனைவரைவும் கலந்து கொள்ள ஊக்குவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடலாம். இந்த விழிப்புணர்வு செயல்பாடு பள்ளிகள் மற்றும் கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் மட்டுமின்றி, கீழ்காணும் பிற அரசு அலுவகங்களில் உள்ள பணியாளர்களும் முதன்மைக்கல்வி அலுவலர் வாயிலாக தகவல் தெரிவித்து கலந்துகொள்ள செய்யலாம்.
இ. பள்ளி ஆயத்த பயிற்சி மையங்கள் செயல்பாடுகள் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்கள் தங்கள் தனித்திறமையினை வெளிக்கொணரும் வகையில் பாதுகாப்பான, எளிமையாக உள்ள பின்வரும் செயல்பாடுகள் ஏதேனும் சிலவற்றை மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து நடத்தி பரிசுகள் வழங்கிடலாம்.
மாணவர்களுக்கான செயல்பாடுகள்
பாடுதல், நடனமாடுதல், தனிநடிப்பு, கதை சொல்லுதல், கவிதை எழுதுதல், செயல்திட்டங்கள் செய்து காட்சிபடுத்துதல், மாறுவேடம், படத்தை பொருத்துதல் (Picture Matching). வடிவங்களை சேர்த்தல், ஜிக்சா புதிர் (Simple Puzzles). நிறம்/வடிவம் அடையாளம் காட்டும் விளையாட்டுகள், வளையம் போடுதல் (Seated Ring Throw), சைகை விளையாட்டுகள், இசை நாற்காலி (Musical Chair). மேற்காண் நிகழ்வுகள் CWSN மாணவர்கள் தங்கள் திறமையினை வெளிப்படுத்தவும்.
நேர்மறையான மற்றும் ஏதுவான கற்றல் சூழலை உருவாக்கவும் இயலும். F. "CRACK 21: Creating Real Awareness for Comprehensive Knowledge on 21 Disabilities"
இவ்வாண்டு உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு Crack 21 என்கின்ற தாலைப்பில் தொடர் போட்டிகள் நடத்தி மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறன்கள் குறித்த ஆழமான விழிப்புணர்வு அனைத்து தரப்பினரிடையே ஏற்படுத்திட போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் கலந்துக்கொள்வதற்கான இணைப்பு (link) மற்றும் QR code விரைவில் வழங்கப்படும். இதனை அனைத்து கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் இடம்பெற்றுள்ள WhatsApp குருப்களில் பகிர்ந்து அனைவரும் பங்கேற்றிட செய்யலாம்.
இவ்வாண்டு Crack 21 கீழ் முக்கிய தினங்களில் மொத்தம் 5 போட்டிகள் நடத்தப்படும். 5 போட்டிகளில் அனைவரும் தொடர்ந்து பங்கேற்கலாம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒருமுறை மட்டுமே பங்கேற்க இயலும். அனைத்து போட்டிகளின் முடிவில் அதிக வினாக்களுக்கு குறைந்த நேரத்தில் விடையளிக்கும் நபர்களுக்கு அடுத்த 2026 ஆண்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தில் பரிசு வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு வழங்கப்படுகிறது.
Link -ஐ கிளிக் செய்து போட்டி தளத்திற்கு செல்லவும்
தங்கள் மொபைல் எண், பெயர் மற்றும் மாவட்டத்தினை பதிவுசெய்து சமர்பிக்கவும்.
திரையில் தோன்றும் 10 கேள்விகளுக்கு 10 நிமிடத்திற்குள் சரியான விடையினை தெரிவு செய்து சமர்பிக்கவும்
சமர்பிக்கப்பட்டவுடன் திரையில் தோன்றும் பங்கேற்பாளர் சான்றிதழினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உ. புகைப்படதளம் (Photo booth)
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அனைத்து பள்ளிகள், வட்டார வளமையம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் கீழ்கண்டுள்ளவாறு அட்டைகள், சார்ட் மற்றும் ஸ்கெட்ச் பயன்படுத்தி புகைப்படதளம் அமைக்கலாம்.
CLICK HERE TO DOWNLOAD IE_world disability Day DEC 3, 2025 - spd Proceedings - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.