கல்லூரி மாணவர்களிடம் கட்டணம் ரூ200 மட்டுமே வசூலிக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 10, 2023

கல்லூரி மாணவர்களிடம் கட்டணம் ரூ200 மட்டுமே வசூலிக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

College students to be charged only Rs 200: Directorate of College Education orders - கல்லூரி மாணவர்களிடம் கட்டணம் ரூ200 மட்டுமே வசூலிக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

கல்லூரி கல்வி இயக்குனர் அனைத்து மண்டலங்களின் இணை இயக்குனர்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர மாணவர்களிடம் இருந்து பல்கலைக்கழகங்களால் வசூலிக்கப்படும் கட்டணங்கள் வெவ்வேறு விதமாக இருப்பதாக புகார்கள் வருகின்றன. பல்கலைக்கழகங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் இனி ஒரே சீராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆண்டுக்கு ரூ.200 மட்டுமே சேர்க்கை கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை பட்ட படிப்பில் சேரும் மாணவர்களிடம் இருந்து ரூ.200 மட்டுமே சேர்க்கை கட்டணமாக பெறப்பட வேண்டும். அரசின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்துமாறு மண்டல இணை இயக்குனர்களை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.