பணி நிரவல் செய்யப்படும் ஆசிரியர்கள் பட்டியல் - அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயித்து பணியிட நிர்ணயம் செய்ய வலியுறுத்துதல் - அதன் பிறகு பணி நிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டுதல் - சார்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 18, 2023

பணி நிரவல் செய்யப்படும் ஆசிரியர்கள் பட்டியல் - அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயித்து பணியிட நிர்ணயம் செய்ய வலியுறுத்துதல் - அதன் பிறகு பணி நிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டுதல் - சார்பு.

பள்ளிக்கல்வி - பணி நிரவல் செய்யப்படும் ஆசிரியர்கள் பட்டியல் - அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயித்து பணியிட நிர்ணயம் செய்ய வலியுறுத்துதல் - அதன் பிறகு பணி நிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டுதல் - சார்பு.

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் பத்து வகுப்புகளுக்கு குறைத்தபட்சம் எட்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள சில அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முதுகலை ஆசிரியர்களே பாடம் கற்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்பொழுது பணியிட நிர்ணயம் செய்யப்பட்டு பணி நிரவல் செய்யப்படும் ஆசிரியர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

இதனால் பல மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடமே இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சில பள்ளிகளில் ஒரு பாடத்திற்கு குறைந்தபட்சம் ஒரு பட்டதாரி ஆசிரியர் கூட இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆறு முதல் பத்து வகுப்புகளுக்கு பாடங்களை கற்பிப்பதற்காகவே கல்வித்துறையால் பல்வேறு பயிற்சிகள் அளிக்கபட்டு முழுமையாக தயார் செய்யப்பட்டவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய முழுமையாக பயிற்சியும் அனுபவமும் பெற்று பட்டதாரி ஆசிரியர்கள் விளங்கி வருகிறார்கள், -

இந்த சூழ்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களே இல்லாமல் 6 முதல் 10 வகுப்புகளை கையாள நினைப்பது தயறான முடிவாகும். இது எந்த வகையிலும் மாணவர்களது கல்வி நலனுக்கு பயன் விளைவிக்காது, குறிப்பாக பொது தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் நலனை இது கடுமையாக பாதிக்கும். ஆகவே, ஆறு முதல் பத்து வகுப்புகளுக்கு குறைந்தபட்ச பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படாமல் STAFF FIKATION செய்யப்படுவது கைவிடப்பட வேண்டும்.உடனடியாக ஆறு முதல் பத்து வகுப்புகளுக்கு எட்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, உபரி ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டு அதன் பிறகே, பணி நிரவல் செய்யப்பட வேண்டும் என தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.