CUET தேர்வு - விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 8, 2023

CUET தேர்வு - விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம்

'இளநிலை க்யூட்': விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம்

புது தில்லி, ஏப்.8: இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு (க்யூட்) ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளநிலை க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த நுழைவுத் தேர்வுக்கு சுமார் 14 லட்சம் பேர் விண்ணப்பித் தனர். இந்தத் தேர்வுகள் மே மாதம் 21 முதல் 31 வரை நடைபெறு கிறது. இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 3 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இளநிலை க்யூட் தேர்வுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.9) முதல் இணைய வழியில் விண் ணப்பிக்க முடியும். இதற்கான கால அவகாசம் செவ்வாய்க்கிழமை (ஏப்.11) இரவு 11.59 மணியளவில் முடிவடைகிறது' என்றனர். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇ ஆர்டி) பாடப்புத்தகங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தேர்வுக்கான பாடத்திட்டத் தின்படி தேர்வுகள் நடைபெறும். நுழைவுத் தேர்வானது குறிப் பிட்ட பள்ளிக் கல்வி வாரியத்தில் பயிலும் மாணவர்களுக்கானது மட்டுமல்ல என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.