வட்டாரக்கல்வி அலுவலர் மீது ஊழல் முறைகேடுபு கார்கள் - மாறுதல் அளித்து தீர்வுகண்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 20, 2023

வட்டாரக்கல்வி அலுவலர் மீது ஊழல் முறைகேடுபு கார்கள் - மாறுதல் அளித்து தீர்வுகண்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை

வேலூர் மாவட்டம் – குடியாத்தம் ஒன்றியம் வட்டாரக் கல்வி அலுவலர் P.வெங்கடேசன் அவர்கள் மீது தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம்-(TNPTA) ஆதாரங்களுடன் அளிக்கப்பட்ட ஊழல் முறைகேடு புகார்கள் - கல்வித்துறை உடனடியாக விசாரணைக் குழு அமைத்து, நடவடிக்கை எடுத்து K.V.குப்பம் ஒன்றியத்திற்கு மாறுதல் அளித்து தீர்வுகண்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தல் - சார்பு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்தில் வட்டாரக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த திரு.P.வெங்கடேசன் அவர்கள் செய்துவரும் ஊழல் முறைகேடுகள் மற்றும் பெண்ணாசிரியர்களை தரக்குறைவாக நடத்துவது ஆகிய குற்றச்சாட்டுகள் சம்மந்தமாக - கடந்த 25.02.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் மதிப்புமிகு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோருக்கு உரிய ஆதாரங்களுடன் தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் - (TNPTA) புகார் மனுக்களை அனுப்பியது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்தில் வட்டாரக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த திரு.P.வெங்கடேசன் அவர்கள் செய்துவரும் ஊழல் முறைகேடுகள் மற்றும் பெண்ணாசிரியர்களை தரக்குறைவாக நடத்துவது ஆகிய குற்றச்சாட்டுகள் சம்மந்தமாக கடந்த 25.02.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் மதிப்புமிகு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோருக்கு உரிய ஆதாரங்களுடன் - தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் (TNPTA) புகார் மனுக்களை அனுப்பியது. இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு – கடந்த 17.03.2023 அன்று குடியாத்தம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களிடம் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வட்டாரக் கல்வி அலுவலர் திரு. P.வெங்கடேசன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பார்வையில் காணும் தொடக்கக் கல்வி இயக்குனரின் உத்திரவின்படி 18.04.2023 அன்று அவர் K.V.குப்பம் ஒன்றியத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம்(TNPTA)-வின் புகார் மனுவினை தொடர்ந்து - உடனடியாக விசாரணைக் குழு அமைத்து - இரண்டு மாதங்களுக்குள்ளாக BEO வெங்கடேசன் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாறுதல் அளித்து - குடியாத்தம் ஒன்றிய ஆசிரியர்கள் அனுபவித்துவந்த இன்னல்களுக்கு தீர்வு கண்ட - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும், மதிப்புமிகு தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் க.அறிவொளி அவர்களுக்கும் தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம்-(TNPTA) சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள, (L.மணி, மாநில பொதுச் செயலாளர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.