உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டல் நெறிமுறை - ஒவ்வொரு பள்ளியிலும் உயர்கல்விக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 23, 2023

உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டல் நெறிமுறை - ஒவ்வொரு பள்ளியிலும் உயர்கல்விக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டல் நெறிமுறைகள்

1. ஒவ்வொரு பள்ளியிலும் உயர்கல்விக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை. SPOC

அ) ஒவ்வொரு பள்ளியிலும் அதிகபட்சமாக 100 மாணவர்களுக்கு ஒரு SPOC நியமிக்கப்பட வேண்டும். 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 2 SPOC க்கள் நியமிக்கப்பட வேண்டும். (எ.கா. 12 ம் வகுப்பில் 120 மாணவர்கள் இருக்கும் பள்ளியில் 2 SPOC க்கள் நியமிக்கப்பட வேண்டும். (2 ஆசிரியர்கள் X 60 மாணவர்கள்])

ஆ) கடந்தாண்டுகளில் அந்த பள்ளி மாணவர்கள் எந்தெந்த கல்லூரிகளில் பொதுவாக சேருகிறார்கள் என்பது குறித்தும், உயர்கல்வி சேருவதில் அந்த பள்ளி /பகுதி மாணவர்களுக்கு உள்ள சிக்கல்கள் குறித்தும் தன்முனைப்போடு அறிந்த கொள்ள வேண்டும். www.kalviseithiofficial.com

இ) தற்போது உள்ள நவீன பாடப்பிரிவுகள், எளிதில் வேலை வாய்ப்பு தரும் பாடப்பிரிவுகள் மற்றும் நுழைவு தேர்வு இல்லாமல் 12 ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் கல்லூரிகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும். (இவற்றுக்கு இணைய வழி பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன). ஈ) 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே SPOC க்கள் தங்களுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள மாணவர்களின் விபரங்களை கையில் வைத்து அந்த மாணவர்களை தொடர்பு கொண்டு உயர்கல்வி குறித்த மாணவர்களின் திட்டத்தை கேட்டறிந்து அவர்கள் உயர்கல்வி செல்வதற்கு மனதளவில் தயார்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

உ) அந்தந்த பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் சேரக்கூடிய அருகிலுள்ள அரசு / தனியார் கல்லூரிகள் / பாடத்திட்டங்கள் குறித்தும், அதற்கான கட்டண விபரங்கள் குறித்தும் SPOC க்கள் அறிந்து கொள்வது மிக அவசியம்.

2. தேர்வு முடிவுகள் வந்த பின் செய்ய வேண்டியவை : www.kalviseithiofficial.com

அ) 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தவுடன் அன்று மாலை 4 மணிக்குள் தோல்வியடைந்த மாணவர்களை அழைத்துப்பேசி ஆலோசனைக் கூறி அவர்களை உடனடி மறுதேர்விற்கு தயார் செய்ய வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் அமைக்கப்பட்டுள்ள Spl Camp-ல் மாணவர்களை சேர்க்க வேண்டும்.

ஆ) மாணவர்களை மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் வரிசைக்கிரமமாக (Ranking) தரப்படுத்த வேண்டும்.

இ) 80 விழுக்காடுகளுக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியல், அவர்களின் வகுப்பு (இட ஒதுக்கீடு), மாணவர்களின் பெயர், மதிப்பெண்கள், பாடவாரி மதிப்பெண்கள் ஆகியவற்றினை இணைப்பு 1A-ல் உள்ள பட்டியலில் பூர்த்தி செய்ய வேண்டும்.

மொத்த மதிப்பெண்களில் 80 சதவீகிதத்துக்கு குறைவாகவும், ஆனால், ஏதேனும் ஒரு பாடத்திலோ அல்லது பாடங்களிலோ 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்கும் மாணவர்களையும் இப்பட்டியலில் சேர்த்து கொள்ள வேண்டும்.

80 விழுக்காட்டிற்கு மேல் எடுத்த மாணவர்கள் ஒவ்வொரு பிரிவு வாரியாக பட்டியல் தயாரிக்க வேண்டும். எ.கா. 1. ST (Tribe), 2. SC (A), 3.SC, 4. BCM, 5. MBC/DNC, BC.

ஈ) 60 முதல் 80 விழுக்காடு வரை மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியல், அவர்களின் வகுப்பு (இட ஒதுக்கீடு), மாணவர்களின் பெயர், மதிப்பெண்கள், பாடவாரி மதிப்பெண்கள் ஆகியவற்றினை இணைப்பு-1B-ல் உள்ள பட்டியலில் பூர்த்தி செய்ய வேண்டும். 60 விழுக்காட்டிற்கு கீழ் எடுத்த மாணவர்கள் ஒவ்வொரு பிரிவு வாரியாக 1C-ல் உள்ள பட்டியலில் பூர்த்தி செய்ய வேண்டும். எ.கா. 1. ST (Tribe), 2. SC (A), 3.SC, 4. BCM, 5. MBC /DNC, BC.

உ) கடந்த ஆண்டின் Cut Off க்கு அந்த பிரிவில் அரசு கல்லூரிகள் / அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு இடங்களை பெற்றவர்களின் Cut Off யை விட தற்போது (10 மதிப்பெண்களுக்கு குறைவாக உள்ள மாணவர் வரை) கட்டாயம் தொழிற்கல்விக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் விண்ணப்பம் செய்வதை SPOC உறுதி செய்ய வேண்டும்.

ஊ) மேற்சொன்ன 1A, 1B, 1C பட்டியலில் மாணவிகளை வெள்ளை கட்டமாகவும், மாணவர்களை கருப்பு கட்டமாகவும் வேறுபடுத்தி காண்பிக்க வேண்டும்.

எ) தேர்வு முடிவுகள் வந்த மறுநாள் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து எந்தெந்த கல்லூரிகளிலெல்லாம், அவர்களுக்கு சேர வாய்ப்பு இருக்கிறது என்பதையும், கடந்த ஆண்டு 7.5 விழுக்காடு தொழிற்கல்வி பாடத்திட்டத்தின் இட ஒதுக்கீடு மற்றும் அதன் Cut Off குறித்தும், அரசின் கல்வி உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டம், குறித்தும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

ஏ) உடனடியாக ஒவ்வொரு மாணவரும் 7.5 சதவீகித இடஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு தொழிற்கல்விகளில் அரசு ஒதுக்கீட்டில் அரசு கல்லூரி இடங்களிலோ அல்லது அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தனியார் கல்லூரிகளிளோ பெற வாய்ப்புள்ள மாணவர்களை (கடந்தாண்டு அப்பிரிவில் கடைசி மாணவர் பெற்ற Cut Off க்கு (10 மதிப்பெண்களுக்கு குறைவாக உள்ள மாணவர் வரை) கட்டாயம் விண்ணப்பிக்க செய்ய வேண்டும். இதற்கு அந்தந்த பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகளை தலைமையாசிரிகள் மேற்கொள்ள வேண்டும். www.kalviseithiofficial.com ஒ) தொழிற்கல்வியில் சேருவதற்கு விருப்பமில்லா மாணவ/ மாணவிகளை அதிகமாக மதிப்பெண்கள் பெற்றியிருப்பவர்களை அந்தந்த பாடப்பிரிவுகளில் சிறப்பு கல்லூரிகளுக்கு விண்ணப்பபிக்க செய்வது மிக அவசியம். எ.கா. வாய்ந்த ஓ) கடந்தாண்டுகளில் ஏதேனும் ஒரு கல்லூரியில் மட்டும் விண்ணப்பம் செய்துவிட்டு, வேறு கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பை இழந்த மாணவர்கள் நிறைய உள்ளனர். எனவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்வது அவசியம். எ.கா. கடந்தாண்டு உயிரியலில் 96 மதிப்பெண் பெற்ற மாணவி அருகில் உள்ள ஒரு சாதாராண தனியார் கல்லூரியில் B.Sc., (தாவரவியல்) சேர்ந்துள்ளார்.

இந்த மாணவிக்கு தமிழ்நாட்டில் தலைசிறந்த அறிவியல் கல்லூரியில் எந்த இடமும் கிடைத்திருக்கும். ஆனால் இந்த மாணவி வேறு எந்த கல்லூரிக்கும் விண்ணப்பம் செய்யவில்லை. பெற்றோரும் அந்த மாணவியை வெளியூர் அனுப்பி படிக்க வைக்க ஆர்வம் காட்டவில்லை. இதுபோன்ற நேர்வுகளில் பெற்றோர்களுக்கும், மாணவிகளுக்கும் சிறந்த கல்லூரிகளில் படிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். இது குறித்து அவர் குடும்பத்துடன் கலந்து பேசி பின்னர் முடிவெடுக்கும் சூழல் இருந்தாலும், பல முக்கிய கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். நாளை அந்த மாணவி சிறந்த கல்லூரிக்கு சென்று பயில விரும்பினாலும், விண்ணப்பம் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு இடம் கிடைக்கவே கிடைக்காது. www.kalviseithiofficial.com

எனவே எந்த கல்லூரியில் சேருகிறோம் என்பது குறித்து இறுதி முடிவெடுப்பதற்கு முன்பாக மதிப்பெண்கள் அடிப்படையில் பல கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்வதை ஆசிரியர்கள் உறுதிபடுத்த வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ/ மாணவிகள் குறைந்தபட்சம் 5 கல்லூரிகளில் விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். இதற்கு மாணவ/மாணவிகளுக்கு தொடர் வழிகாட்டுதல் நடத்தப்பட வேண்டும். மேற்சொன்ன இந்த மாணவி சித்ராவிற்கு ஒரு பாடத்தில் திறமை இருப்பது போன்று சில மாணவர்களுக்கு, மற்ற திறமைகள் உதாரணமாக கலை, விளையாட்டு போன்றவற்றில் திறமையான மாணவர்களை அந்தந்த திறமைகளை ஊக்குவிக்கும் கல்லூரிகளில் சேருவது தான் முக்கியமே தவிர குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் சேருவது முக்கியமல்ல. எ.கா. ஒரு மாணவர் கபடி விளையாட்டில் மிகச்சிறந்த விளக்குகிறார். அவர் B.A. (Economics) அருகிலுள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டார். அந்த கல்லூரியில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒரு வேளை அந்த மாணவர் கபடி விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரும் திருச்சி St.Joseph கல்லூரியில் ஏதேனும் கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்திருந்தால் கூட அவரின் கபடி திறமை மேருகேறி விளையாட்டில் சாதித்திருப்பார். www.kalviseithiofficial.com

எனவே எந்த கல்லூரியில் படிப்பது என்பதும், எந்த பாடப்பிரிவில் படிப்பது என்பதும் இரண்டுமே தனித்தனி முக்கியத்துவம் வாய்ந்தவை. அதை புரிந்து கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களை தனித்தனியாக வழிகாட்ட வேண்டும். நல்ல ஆர்வமுடைய சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை சிறந்த கல்லூரிகளில் விண்ணப்பம் செய்வதற்கு ஆற்றுப்படுத்த வேண்டும். எ.கா. தாவரவியல், உயிரியிலில் ஆர்வமுடைய மாணவ/ மாணவிகளை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், மாணவிகளை பாத்திமா கல்லூரியிலும், அமெரிக்கன் கல்லூரியிலும் விண்ணப்பம் செய்ய ஆற்றுப்படுத்தலாம். பெங்களூர், டெல்லி, சென்னை மற்றும் கோயம்புத்தூர் பெருநகரங்களில் சென்று படிப்பதால் கிடைக்கும் உலக அனுபவங்களின் முக்கியத்துவம் என்ன என்பதையெல்லாம் மாணவர்களுக்கு எடுத்துரைத்து தெளிவுபடுத்த வேண்டும். 3. மேற்சொன்ன தொழிற்கல்வி (மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், சட்டம், செவிலியர் பயிற்சி) மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்வதற்கு ஒவ்வொரு மாணவ/மாணவியரை தனித்தனியாக பின் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் (Follow). இதற்காக அனைத்து SPOC க்கள் தேர்வு முடிவுகள் வந்த ஒரு வாரம் முழுவதும் பள்ளியில் இருக்க வேண்டும்.

முக்கியமாக புதுமைப்பெண் திட்டம் மாணவிகளின் உயர்கல்விக்கு முக்கிய திட்டமாக உள்ளதால் மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பெண் குழந்தைகளை 100 க்கு 100 உயர்கல்வியில் சேர்க்க வேண்டும்.

சில பெற்றோர்கள் திருமணம் குறித்து கவலை தெரிவித்தாலும், 18 வயது நிரம்பியவுடன் திருமணம் செய்துவிட்டு கல்லூரிக்கு அனுப்பலாம் என்ற செய்தியை சொல்லியாவது பெற்றோரை ஆற்றுப்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு அரசு கல்லூரியிலோ 1 அரசு ஒதுக்கீட்டிலோ சேரும் மாணவ/மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தினை அரசே ஏற்று கொள்கிறது. மேலும் குறைவான கட்டணம் தான் என்பதை எடுத்து சொல்ல வேண்டும்.

தனியார் கல்லூரிகளில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் விண்ணப்பம் செய்து சேருவதை உறுதி செய்ய வேண்டும். மேற்சொன்ன இரண்டிற்கும் அரசால் உதவித்தொகை, கல்வி கட்டணம், பெறாமலோ, பெற்றோர்களால் அந்த கட்டணத்தை செலுத்த இயலாமாலோ இருப்பின் அதற்கு வங்கி கடன் ஏற்பாடு செய்யலாம் என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

கல்லூரி அட்மிசன் கிடைத்தவுடன் ஒவ்வொரு வட்டத்திலும் மற்றும் வட்டாரத்திலும் கல்விக்கடன் வழங்கும் முகாம் மாவட்ட நிர்வாகத்தினால் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. மிகவும்வரிய நிலையிலிருந்து உயர்கல்வி கற்க விளையும் மாணவர்களுக்கு பொருளாதாரம் மட்டும் தடையாக இருக்கும் சூழலிலுள்ள மாணவர்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரிகள் குழு பட்டியல் அளிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு சமூக பொறுப்புரிமை நிதி உள்ளிட்ட திட்டங்களின் மூலம் உதவிகளை செய்தவதற்கான வாய்ப்புகள் குறித்து முன்னேடுக்கப்படும். 4. மேற்கண்ட 3-ல் குறிப்பிட்டது போக மீதமுள்ள மாணவர்களை அந்தந்த பகுதிகளில் ஏதேனும் ஒரு கல்லூரியில் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி போன்றவற்றில் விண்ணப்பம் செய்து உயர்கல்வி பெறுவதற்கு ஆசிரியர் வழிகாட்டி உதவ வேண்டும்.

5. இறுதியாக மிக குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை தயார் செய்து, அவர்களையும் விடுபடாமல் ஏதேனும் உயர்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும். www.kalviseithiofficial.com

6.இப்பட்டியல்கள் தினசரி Google Sheet மூலம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

7. தேர்வு முடிவுகள் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு 5 சிறப்பு வல்லுநர்கள் புதிய கல்வி வாய்ப்புகள் குறித்து அளிக்கும் இணைய வழி பயிற்சியில் ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக ஆசிரியர்களின் அறிவாற்றலும், மாணவர்களுக்கு வழிகாட்டுதலுமான புதிய வாய்ப்புகள் ஏற்படும் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

8. உயர்கல்வியில் ஒரு மாணவனை சேர்ப்பது என்பது ஆசிரியர்களின் தார்மீக கடமை என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். பெற்றோர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். பெற்றோர்கள் பொருளாதார காரணமாக பெண் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்ப மறுக்கிறார்கள். போன்றவையெல்லாம் காரணங்களாக குறிப்பிட்டு இவையொல்லாம் மாணவர்களின் இளம் பருவத்தில் எதிர்காலம் குறித்த பயமோ, புரிதலோ இல்லாமலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணராமலும் இது போன்ற காரணங்களை சொல்வார்கள். ஆனால் கற்று வாழ்வில் நல்ல இடத்தை பெற்ற ஆசிரியர்கள் தான் மாணவர்களை எப்பாடுபட்டாவது உயர்கல்வியில் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.