2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துவது சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் 10.04.2023நாளிட்ட செயல்முறைக் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 11, 2023

2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துவது சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் 10.04.2023நாளிட்ட செயல்முறைக் கடிதம்

2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துவது சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் 10.04.2023நாளிட்ட செயல்முறைக்கடிதம்

பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டிற்கான வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைக்குறிப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரித்து பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் பின்வரும் இணைப்புகளில் 13,04,2023 அன்று பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.

https://cmistnschoolsgov.in/login என்னும் URL வழியாகவோ அல்லது

https://examstnschoolsgov.in.dogin என்னும் URL வழியாகவோ பள்ளிகள் தங்களது school UDISE Login - ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கூறிய URLஐ ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்கள் கைபேசியைப் பயன்படுத்தியும்

இந்த PDF வடிவத்தில் வழங்கப்படும் தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்களையோ அல்லது பள்ளியளவில் ஆசிரியர்களே தயாரிக்கும் தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்களையோ கொண்டு தேர்வினை நடத்த சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். மாவட்ட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி அலுவலர்கள்: (தொடக்கக் கல்வி)

மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலமாக மதிப்பீடு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அச்சுப்பிரதி இயந்திரம் (Printer) வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, கோயமுத்தூர், ஈரோடு. திருப்பூர், நீலகிரி சேலம், திருச்சி, சென்னை, கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அச்சுப்பிரதி இயந்திரம் (Printer): வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட அச்சுப்பிரதி இயந்திரத்தை பயன்படுத்தி, இந்நிறுவன மதிப்பீட்டு புலத்தின் வழியாக பெறப்பட்ட வினாக்களையோ அல்லது ஆசிரியர்களே உருவாக்கும் வினாக்களையோ பிரதி எடுத்து (Print) தேர்வினை நடத்திக் கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.