10ம் வகுப்பு பொதுத் தேர்வின் ஆங்கில தேர்வில் கேள்வி எண்கள் 4, 5, 6ல் குளறுபடி - 3 மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை - தேர்வுத்துறை விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 10, 2023

10ம் வகுப்பு பொதுத் தேர்வின் ஆங்கில தேர்வில் கேள்வி எண்கள் 4, 5, 6ல் குளறுபடி - 3 மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை - தேர்வுத்துறை விளக்கம்



10ம் வகுப்பு பொதுத் தேர்வின் ஆங்கில தேர்வில் கேள்வி எண்கள் 4, 5, 6ல் குளறுபடி

3 மதிப்பெண்கள் வழங்க தேர்வு துறைக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தேர்வுத்துறை விளக்கம்

*ஆங்கில பாடத்தில் கிடைக்குமா 5 மதிப்பெண்கள்*

இன்று(10-04-2023) நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கில பாடத்தில் Antonyms என்று குறிப்பிடாமல் Synonyms ஐ தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இதில் கேள்வி எண் 4,5,6 ஆகியவை Antonyms ஆக வரவேண்டும். இதற்கு பதில் அளிப்பதில் மாணவர்கள் சிரமப்பட்டு மூன்று மதிப்பெண்களை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதைப்போன்று கேள்வி எண் 28 - Road Map ல் You are here என்று கொடுக்கப்பட்டதிலிருந்து செல்லக்கூடிய வழியில் ஒரு வழியை அடைப்பது போன்று *கோடு ஒன்று* இருந்தது . இதனால் மாணவர்கள் மிகுந்த குழப்பம் அடைந்தனர். எனவே இக்கேள்விக்கு இரண்டு மதிப்பெண்கள் எடுப்பது சிரமமாக கருதுகின்றனர்.

@kalviseithi எனவே மாணவர்களின் நலன் கருதி கருணை அடிப்படையில் 5 மதிப்பெண்களை வழங்குமா தமிழக பள்ளிக் கல்வித்துறை என்பது அனைத்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.