Vanavil mandram competition - மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 16, 2023

Vanavil mandram competition - மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் "பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச்செயல்பாடுகளை ஊக்குவிக்க வெவ்வேறு காலகட்டங்களில் இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தன என்றும் கொரோனா பெருந்தொற்றால் கடந்த சில ஆண்டுகளாக இம்மன்றங்கள் செயல்படாதநிலையில் அவற்றைப் புதுப்பித்து சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்படும்" என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

2022-2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்றச் செயல்பாடுகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் பார்வை (3) -இல் காணும் செயல்முறைகளின்படி இலக்கியமன்றம், திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பிப்ரவரி மாதத்திற்கான வானவில் மன்றப் போட்டிகள் பள்ளி அளவில், ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. அதனையடுத்து மார்ச் 20 முதல் 25 வரை மாநில அளவிலான வானவில் மன்றப் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது. வருவாய் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களை மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் வீதம் அனுப்பி வைக்க வேண்டும். தலா 4 மாநில அளவில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவரும் பள்ளி சீருடையில் மற்றும் மாணவர்கள்/ஆசிரியர்கள் அடையாள அட்டை(ID Card) / ஆதார் அட்டையை உடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இணைப்பில் கண்டுள்ளவாறு மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்களை 8 மண்டலமாக ஒருங்கிணைத்து பொறுப்பாசிரியர் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் வகையில் மாணவர்களை அனுப்பி வைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய மண்டல முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்ட மாணவர்களை பொறுப்பாசிரியர் மூலம் மண்டல முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது. மேலும், மண்டல வாரியாக மாணவர்களை சென்னை அழைத்து வருவதற்கான போக்குவரத்து செலவினம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட அலுவலகத்தின் மூலம் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மாநில அளவிலான வானவில் மன்றப் போட்டிகள் சென்னையில் மார்ச் 20 முதல் 25 வரை 6 நாட்கள் நடைபெறுகிறது. 8 மண்டலங்களிலிருந்து வரும் மாணவர்கள்/ பொறுப்பாசிரியர்கள் மார்ச் 19-ஆம் தேதி மாலை 8 மணிக்குள் Vestin Park Hotel, 39, Red Cross Road, Egmore, Chennai-600 008. இல் உள்ள குழுவிடம் அறிக்கை (Report) அளித்திட தெரிவிக்கப்படுகிறது. சென்னை முதன்மைக் கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலக துணை ஆய்வாளர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு பொறுப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டு போட்டிகளை சிறப்பான முறையில் நடத்திட அறிவுறுத்துமாறு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். தங்குமிடம் தொடர்புக்கு:

1. A. DONBOSCO, Phone No: 9941385747

2.A.SEBASTINE. Phone No: 9962803363

இணைப்பு: 8 மண்டல பொறுப்பாசிரியர்கள் விவரம்.


CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.