வகுப்பறையில் இருக்கைகளை சேதப்படுத்திய மாணவர்கள் - பொதுத் தேர்வில் பங்கேற்க தடைவிதித்து தனித்தேர்வில் பங்கேற்க வைக்க திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 8, 2023

வகுப்பறையில் இருக்கைகளை சேதப்படுத்திய மாணவர்கள் - பொதுத் தேர்வில் பங்கேற்க தடைவிதித்து தனித்தேர்வில் பங்கேற்க வைக்க திட்டம்

வகுப்பறையில் இருக்கைகளை சேதப்படுத்திய மாணவர்கள் - பொதுத் தேர்வில் பங்கேற்க தடைவிதித்து தனித்தேர்வில் பங்கேற்க வைக்க திட்டம் - Students who vandalized seats in the classroom - Proposed to debar them from appearing in the general examination and make them appear in a separate examination

தர்மபுரி மாவட்டத்தில் வகுப்பறையில் இருக்கைகளை சேதப்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

தர்மபுரி மாவட்டத்தில் வகுப்பறையில் இருக்கைகளை சேதப்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு - பொதுத் தேர்வில் பங்கேற்க தடைவிதித்து ஜூன் மாதம் நடைபெறும் தனித்தேர்வில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

அப்போது தேர்வு முடிந்ததும் இங்க் அடித்து விளையாடுவோம், இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகிறார்கள் அரசு மாதிரி பள்ளிகளில் கட்டாயமாக நுழைவுத் தேர்வு கிடையாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அப்போது தேர்வு முடிந்ததும் இங்க் அடித்து விளையாடுவோம், இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகிறார்கள், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 8ம் வகுப்பு வரையில் மாணவர்களின் கல்வி நிலை குறித்து சர்வே எடுக்க சொல்லியிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்காடு அருகே, மாமல்லபுரம் அரசு பள்ளியில் மேசை நாற்காலிகளை உடைத்து ஐந்து மாணவ மாணவிகள் அட்டகாசம் செய்துள்ளனர். மேசை மற்றும் நாற்காலிகளை உடைத்த 5 மாணவ மாணவிகள் ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், அப்போது தேர்வு முடிந்தது இங்க் அடித்து விளையாடுவோம். இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில், பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு மாதிரி பள்ளிகளில் கட்டாயமாக நுழைவுத் தேர்வு கிடையாது. எட்டாம் வகுப்பு வரையில் மாணவர்கள் கல்வி நிலை குறித்து சர்வே எடுக்க சொல்லி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.