அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு - செய்தி வெளியீடு எண்: 433 நாள்: 03.03.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 3, 2023

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு - செய்தி வெளியீடு எண்: 433 நாள்: 03.03.2023

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு - செய்தி வெளியீடு எண்: 433 நாள்: 03.03.2023 - Minister Udayanidhi Stalin conducts surprise inspection in primary school today - Press Release No: 433 Date: 03.03.2023

செய்தி வெளியீடு எண்: 433
நாள்: 03.03.2023
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாமக்கல் நகராட்சி, அழகுநகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து, இன்று (03.03.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாமக்கல் நகராட்சி, அழகுநகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து, இன்று (03.03.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட அழகுநகர் பகுதியில் இயங்கி வரும் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து இன்று (03.03.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, நகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளிடம் உணவு சுவையாக மற்றும் தரமாக உள்ளதா என கேட்டறிந்தார்.

மேலும், காலை எத்தனை மணிக்கு உணவுகள் வழங்கப்படுகிறது எனவும், எத்தனை மாணவர்கள் இதனால் பயனடைகிறார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடிக் கொண்டே உணவருந்தினார்.

தொடர்ந்து, அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கற்றல், கற்பித்தல் முறை, அளிக்கப்படும் பயிற்சிகள், அதற்கான அட்டவணைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், அந்தப்பள்ளியில் உள்ள கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, சுகாதாரமான முறையில் பராமரித்திட ஆசிரியர்களிடம் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஸ்ரேயா பி.சிங் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.