தேர்வு மையப் பணி ஒதுக்கீடு தலைமையாசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 27, 2023

தேர்வு மையப் பணி ஒதுக்கீடு தலைமையாசிரியர்கள் அதிருப்தி

தேர்வு மையப் பணி ஒதுக்கீடு தலைமையாசிரியர்கள் அதிருப்தி - Exam Center Work Allocation Principals Dissatisfied

மதுரையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிக்கு சீனியர் தலைமையாசிரியர்கள் பலருக்கு பணிகள் ஒதுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்.,6 துவங்குகிறது. 38,943 மாணவர்கள் 152 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கான வினாத்தாள் 9 நோடல் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. தேர்வுப் பணிக்கு முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறைக் கண்காணிப்பாளர் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கள்ளர் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் தலைமையாசிரியர் நியமிக்கப்பட வேண்டிய இடங்களில் வேண்டுமென்றே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உசிலம்பட்டி உள்ளிட்ட சில மையங்களில் அனைத்து நிலையிலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கே பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைமையாசிரியர்கள் கூறுகையில், ''முதன்மை கண்காணிப்பாளர் பணியிடம் தலைமையாசிரியருக்கு ஒதுக்க வேண்டும். இல்லாத நிலையில் சீனியர் பட்டதாரி ஆசிரியருக்கு ஒதுக்கலாம். ஆனால் சீனியர் தலைமையாசிரியர் புறக்கணிக்கப்பட்டு அவர்களுக்கு பதில் பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சி.இ.ஓ., கார்த்திகா விசாரித்து நடவடிக்க எடுக்க வேண்டும்'' என்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.