ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை/ கணினிப் பயிற்றுநர் நிலை:- நேரடி நியமனம் - சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பணப்பலன் வழங்கப்படாமை- உடன் வழங்க நடவடிக்கை எடுக்க கோருதல் -சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 27, 2023

ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை/ கணினிப் பயிற்றுநர் நிலை:- நேரடி நியமனம் - சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பணப்பலன் வழங்கப்படாமை- உடன் வழங்க நடவடிக்கை எடுக்க கோருதல் -சார்பு

முதுகலை ஆசிரியர் நேரடி நியமனம்,சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான பணப்பலன்களை உடன் வழங்கவேண்டி தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு கடிதம்

ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை/ கணினிப் பயிற்றுநர் நிலை:- நேரடி நியமனம் - சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பணப்பலன் வழங்கப்படாமை- உடன் வழங்க நடவடிக்கை எடுக்க கோருதல் -சார்பு.

2020-2021 ஆம் ஆண்டு, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் /உடற்கல்வி இயக்குநர் நிலை-:/ கணினிப்பயிற்றுநர் நிலை நேரடி நியமனத்திற்கான தேர்வு முடிவுகள் 04,07,2022 அன்று வெளியிடப்பட்டது. மேலும் 17 பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கென தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 400 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் 2022 செப்டம்பர் 1 ஆம் தேதி அன்றே சென்னைக்கு வரவழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் துவங்கப்பட்டன. ஆசிரியர்களின் போக்குவரத்து, தங்குமிடம் உணவு ஆகிய பல்வேறு இன்னல்களுக்கிடையே இப்பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இச்சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பயணப்படி மற்றும் உழைப்பூதியம் வழங்குவதற்காக அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் தங்கள் அலுவலகம் மூலம் பெறப்பட்டன. ஆனால் இந்நாள் வரையில் அவர்களுக்கான பயணப்படி மற்றும் உழைப்பூதியம் வழங்கப்படாமல் உள்ளதை தங்களின் மேலான கவனத்திற்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கொண்டுவருவதோடு உடனடியாக அவர்களுக்கான பணப்பலன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.