TNPSC சட்டத்தில் திருத்தம் தமிழ்நாடு அரசு பணிகளில் சேர தமிழில் தேர்ச்சி கட்டாயம்: பேரவையில் மசோதா நிறைவேற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 17, 2023

TNPSC சட்டத்தில் திருத்தம் தமிழ்நாடு அரசு பணிகளில் சேர தமிழில் தேர்ச்சி கட்டாயம்: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

TNPSC சட்டத்தில் திருத்தம் தமிழ்நாடு அரசு பணிகளில் சேர தமிழில் தேர்ச்சி கட்டாயம்: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்ட பேரவையில் நேற்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது: 2021 டிசம்பர் 1ம் தேதி முதல் ஆட்சேர்ப்புக்காக, நேரடி ஆட்சேர்ப்பு மூலம் எந்தவொரு பணியிலும் எந்தவொரு பதவிக்கும், விண்ணப்பிக்கும் நபர் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழித்தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவை அவ்வப்போது அரசால் ஆணையிடப்பட வேண்டும். 2021 டிசம்பர் 1ம் தேதி தொடங்கும் காலத்தின்போதும் தமிழ்நாடு அரசிதழில் இந்த சட்டம் வெளியிடப்படும் தேதியுடன் முடிவடையும் போதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் இந்த சட்டம் நடைமுறையில் இருந்ததைபோல சட்டத்துடன் இணங்கிய வகையில் செல்லும் தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக கொள்ளப்படும். 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (நிபந்தனைகள்) சட்டத்தின் 21ம் பிரிவின்படி, எந்த நபரும் மாநில அலுவல் மொழி அதாவது தமிழ் மொழி குறித்த போதிய அறிவு பெற்றிருந்தாலன்றி அவர் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் பணி எதிலும் நியமனம் ெசய்ய தகுதியுடையவரல்ல. ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பத்தின்போது தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணி நியமனம் பெற்றால் அவர்கள் பணியமர்த்தப்பட்ட தேதியிலிருந்து 2 ஆண்டுகள் கால அளவிற்குள் தமிழில் இரண்டாம் வகுப்பு மொழி தேர்வில் தேர்ச்சி பெறுதல் வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுதல் வேண்டும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து மாநில அரசு துறைகளிலும், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் இளைஞர்களை 100 சதவீதம் அளவிற்கு ஆட்சேர்ப்பு செய்வதை உறுதி செய்யும் பொருட்டு ஆட்சேர்ப்பு முகமைகள் நடத்தும் நேரடி ஆட்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழித்தாள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கிணங்க 2021 டிசம்பர் 1ம் தேதியிட்ட அரசாணைகள் மனிதவள மேம்பாடு துறையால் வெளியிடப்பட்டன. இதற்காக 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா மீது பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி, நாகப்பட்டினம் ஷா நவாஸ் (விசிக), பண்ருட்டி வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் பேசினர். மசோதாவின் மீது வேல்முருகன், பாமக ஜி.கே.மணி, விசிக ஷா நவாஸ் பேசினர். அதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசும்போது, ஏற்கனவே இந்த சட்ட திருத்தம் குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. முதலில் பணி நியமனம் பெற்று அதன்பிறகு 2 ஆண்டுகளில் தமிழ் கற்க வேண்டும் என்றிருந்தது. இந்த நிலையில் மெடிக்கல் போர்டு தொடர்பான வழக்கில் ஏற்கனவே இருக்கிற அரசாணையை திருத்துகிற வகையில் சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இன்றைக்கு இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றவில்லை என்றால் தமிழ் ேதர்வே தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். உறுப்பினர்கள் கோருவதை அப்போதைக்கப்போது திருத்திக்கொள்ளலாம். ஆனால், இப்போது இந்த சட்டதிருத்ததை நிறைவேற்றவில்லை என்றால் எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதையடுத்து, இந்த சட்ட முன்வடிவு அவையின் ஒப்புதலுக்கு விடப்படுகிறது என்று பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்தார். இதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.