ஆசிரியர்களுக்கு சம்பள பிரச்னை அதிகாரிகளுக்கு சங்கங்கள் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 29, 2023

ஆசிரியர்களுக்கு சம்பள பிரச்னை அதிகாரிகளுக்கு சங்கங்கள் கடிதம்

ஆசிரியர்களுக்கு சம்பள பிரச்னை அதிகாரிகளுக்கு சங்கங்கள் கடிதம்

தமிழக பள்ளிக் கல்வி துறையில், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, சம்பள பிரச்னை நீடிப்பதால், அதற்கு தீர்வு காணும்படி, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளிக்கு, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்:

தமிழகம் முழுதும், 8,000க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்படுகின்றன.

இந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, அரசின் சார்பில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், இதற்கான சம்பள பட்டியல் அனுமதிக்கப்பட்டு, வங்கி கணக்கில் சம்பளம் பெறப்படுகிறது. இந்த நடைமுறையில், இதுவரை எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை.

ஆனால், இந்த மாதம் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்கள் சம்பளத்துக்கு ஊதிய பட்டியல் தயாரிக்கும் போது, நிதி ஒதுக்கீடு இல்லை என்று கூறி, தமிழக நிதித்துறையின் இணையதளத்தில் பட்டியல் ஏற்கப்படவில்லை.

இதுதொடர்பாக, 10 நாட்களாக செய்திகள் வந்தாலும், இதுவரை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில், இந்த மாத ஊதியம் கிடைக்குமா என்று தெரியவில்லை.

இதற்கு தீர்வு காணும் வகையில், ஊதியம் விரைவாக கிடைக்கவும், எதிர்காலத்தில் இந்த பிரச்னை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் சார்பில், தமிழக பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமாருக்கும், ஆசிரியர் சங்கத்தினர் மனு அனுப்பி உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.