மாணாக்கர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற பயிற்சிபத்திரிக்கை செய்திநாள் 20.01.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 20, 2023

மாணாக்கர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற பயிற்சிபத்திரிக்கை செய்திநாள் 20.01.2023

மாணாக்கர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற பயிற்சி - பத்திரிக்கை செய்தி - நாள் 20.01.2023

பத்திரிக்கை செய்தி - நாள் 20.01.2023

தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற பயிற்சி வழங்கப்பட உள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெற Aspiring Minds Computer Adaptive Test (AMCAT) பயிற்சியினை வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதமும் இப்பயிற்சியினை பெற அனைத்து செலவினையும் தாட்கோவால் வழங்கப்படும்.

இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் AMCAT தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.தேர்வில் வெற்றி பெறும் மாணக்கர்களுக்கு AMCAT சான்றிதழும் வழங்கப்படும். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம். இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம் மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி,இ.ஆ.ப,. என அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.