7th Pay Commission: பட்ஜெட்டுக்கு பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், மாஸ் செய்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 20, 2023

7th Pay Commission: பட்ஜெட்டுக்கு பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், மாஸ் செய்தி

7th Pay Commission: பட்ஜெட்டுக்கு பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், மாஸ் செய்தி 7th Pay Commission: Bumper hike in employee pay after Budget, Mass News

7th Pay Commission: ஊடக அறிக்கையின்படி, சுமார் 1 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பட்ஜெட்டுக்குப் பிறகு பெரிய அளவிலான நன்மையைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும்.

தற்போது 38 சதவீத அகவிலைப்படி கிடைக்கிறது.

சம்பளம் எவ்வாறு அதிகரிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

7 வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அவர்களது ஊதியத்தில் ஒரு பம்பர் ஏற்றம் இருக்கப்போகின்றது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய ஏற்றம் பெரியதாக இருக்கும் என தெரிகிறது. அவர்களுக்கு சுமார் 90 ஆயிரம் ரூபாய்க்கான உயர்வு இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊடக அறிக்கையின்படி, சுமார் 1 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பட்ஜெட்டுக்குப் பிறகு இந்த நன்மையைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும்

மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை மத்திய அரசு அதிகரிக்கக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் என்பது உறுதி. ஏனெனில், தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, அகவிலைப்படி குறைந்தபட்சம் 3 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

தொழிலாளர் அமைச்சகத்தின் தொழில்துறை தொழிலாளர்களுக்கான (AICPI-IW) அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி தீர்மானிக்கப்படுகிறது. நவம்பர் 2022 இன் தரவுகளின்படி, 38 சதவீத அகவிலைப்படி பெறும் ஊழியர்களின் டி.ஏ. 41 சதவீதமாக அதிகரிக்கும். ஆனால் டிசம்பர் 2022 இன் ஏஐசிபிஐ தரவுகளில் நல்ல ஏற்றம் ஏற்பட்டால், ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கக்கூடும். புதிய அகவிலைப்படி ஜனவரி 2023 முதல் பொருந்தும். டிசம்பர் 2022 பணவீக்க புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இதில் ஏஐசிபிஐ குறியீட்டில் நல்ல ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சுமார் 3 சதவிகிதம் இருப்பது நிச்சயம் என்று நம்பப்படுகிறது. இந்த அடிப்படையில், மாதத்திற்கு ரூ .2.5 லட்சம் அடிப்படை சம்பளத்துடன் அமைச்சரவை செயலாளர் நிலை அதிகாரிகளின் அகவிலைப்படி, ரூ .7,500 வரை அதிகரிக்கும். அதாவது அவர்களின் சம்பளம் ஆண்டுதோறும் ரூ .90 ஆயிரம் அதிகரிக்கும்.

அதே நேரத்தில், மாதத்திற்கு ரூ .30 ஆயிரம் அடிப்படை சம்பளம் கொண்ட ஊழியர்கள் மாதத்திற்கு ரூ .900 ஏற்றத்தை பெறுவார்கள். அதாவது சம்பள அதிகரிப்பு ஆண்டுக்கு ரூ.10,800 ஆக இருக்கும்.

அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மதிப்பாய்வு செய்யப்படுகின்றது

பணவீக்கம் அதிகரிப்பதால், அதை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்களின் வாழ்க்கை மற்றும் உணவு தேவைகளை பராமரிக்க டிஏ, அதாவது அகவிலை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.