பூமிக்கடியில் மழைநீரை சேமிக்க புதிய அமைப்பு: அரசு பள்ளி மாணவி அசத்தல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 20, 2023

பூமிக்கடியில் மழைநீரை சேமிக்க புதிய அமைப்பு: அரசு பள்ளி மாணவி அசத்தல்!

பூமிக்கடியில் மழைநீரை சேமிக்க புதிய அமைப்பு: கிருமாம்பாக்கம் அரசு பள்ளி மாணவி அசத்தல் New system to store rainwater underground: Kirumbakkam Govt School girl Asthal

புதுச்சேரி: மழைநீர் வீணாவதை தடுத்து பூமிக்கடியில் சேமிக்க, புதிய நீர்சேமிப்பு மற்றும் வெள்ளக் கட்டுப் பாட்டு அமைப்பை உருவாக்கி அசத்தி இருக்கிறார் புதுச்சேரி அரசு பள்ளியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி இக்ஷயா. இதற்காக மண்டல, மாநில அறிவியல் கண்காட்சியில் சிறப்பு பரிசையும் வென்றுள்ளார்.

வெயில் காலத்தில் குடிநீரைத் தேடி அலைவதும், மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி தவிப்பதும் தொடர் கதையாகவே இருக்கிறது.

இன்று தூய்மையான தண்ணீர் நமது அன்றாட பயன்பாட்டுக்கு கிடைப்பது மிகப்பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவி இக்ஷயா மழைநீர் வீணாவதை தடுத்துபூமிக்கடியில் சேமிக்க "இன்னோ வேட்டிவ் வாட்டர் சேவிங் அண்டு பிளெட் கண்ட்ரோல் சிஸ்டம்" என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து மாணவி இக்ஷயா கூறியதாவது:

ஒருமுறை கனமழை பெய்தபோது எங்கள் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வெளியே செல்ல முடியாமல் தவித்தோம்.

கொசுக்களால் காய்ச்சல் போன்றநோய்களால் மக்கள் பாதிக்கப்பட் டனர். மழைநீரும் வீணாக கடலில்போய் சேர்ந்தது. இந்த மழைநீரைபூமிக்கு அடியில் ஏன் சேமிக்கக்கூடாது என்று யோசித்தேன். இதுபற்றி என்னுடைய பள்ளி ஆசிரியர் செந்திலிடம் யோசனை கேட்டேன்.

அவரது வழிகாட்டுதலின்பேரில், “இன்னோவேட்டிவ் வாட்டர் சேவிங்அண்டு பிளெட் கண்ட்ரோல் சிஸ்டம்"என்ற புதிய அமைப்பை உருவாக்கினேன்.

என்னுடைய இந்த படைப்புக்கு புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடைபெற்ற மண்டல, மாநில அளவிலான கண்காட்சியில் சிறப்பு பரிசு கிடைத்தது. மேலும் மண்டல அளவில் 150 படைப்புகளில் 8 சிறந்த படைப்புகள் தேர்வாகி மாநில அளவில் பங்கேற் றது.

அதில் என்னுடைய படைப்பும் ஒன்று. புதிய குடியிருப்புகளில்...

புதிதாக உருவாக்கப்படும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளின் இரண்டு பக்கங் களில் துளைகள் இட வேண்டும். இத்துளைகள் வழியாக மழைநீர் உள்ளே செல்லும். பிறகு மழைநீர் வடிகட்டப்பட்டு பூமிக்கு அடியில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சேமிக்கப்படும். இந்த தொட்டியில் உள்ள மழைநீரின் சிறு பகுதி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மற்றொரு குழாய் வழியாக பூமிக்கு உள்ளே செலுத்தப்படும்.

மழைநீர் வீணாவது தடுப்பு

மழைநீர் சேகரிப்பு தொட்டி முழு கொள்ளளவை எட்டிய பிறகு குழாய் வழியாக ஊரில் உள்ள குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் சேமிக்கப்படும். இதனால் மழைநீர் வீணாக கடலில் போய் கலப்பதை தடுக்க முடியும். நீர்நிலைகள் கோடை காலங்களிலும் வற்றிப்போகாமல் பாதுகாக்க முடியும். விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

குடிநீருக்கும் பயன்படுத்தலாம். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இந்தஅமைப்பு மழைக்காலங்களில் மழைபெய்யும்போது மட்டும் திறந்திருக்கும். மற்ற காலங்களில் மூடியே இருக் கும் என்றார் இக்ஷயா

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.