பொங்கல் பண்டிகை போனஸ் வழங்க வேண்டும் அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 25, 2022

பொங்கல் பண்டிகை போனஸ் வழங்க வேண்டும் அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை!

பொங்கல் பண்டிகை போனஸ் வழங்க வேண்டும் அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை!

அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை பாடங்களில் பணியாற்றி வருகின்ற 12 ஆயிரம் பேர் தங்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்றும், தி.மு.க.,தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பா.ம.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என பல்வேறு அரசியல் கட்சிகளும் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற ே வண்டும் என அறிக்கை விடுத்துள்ளனர். இதனால் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:

தமிழகத்தில் தி.மு.க., வெற்றி பெற்ற உடனே பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வார்கள் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். 19 மாதங்கள் ஆகிவிட்டது.

சம்பளம் உயர்வுகூட கொடுக்கவில்லை. பொங்கல் போனஸ் இந்த முறையாவது பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளோம்.

அதோடு பொங்கல் பண்டிகை முன்பணம் கேட்டுள்ளோம். தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி எங்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும். 11 ஆண்டு தொகுப்பூதியத்தை ஒழித்து, தி.மு.க., 181வது தேர்தல் வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.